World Cup 2023: மீண்டும் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதல் பேட்டிங் தேர்வு - கூடுதல் ஸ்பின்னருடன் களமிறங்கும் தென் ஆப்பரிக்கா
பாகிஸ்தான் அணியில் இரண்டு மாற்றங்கள், தென் ஆப்பரிக்கா அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதல் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. சென்னை மைதானத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட் செய்து தோல்வி அடைந்தபோதிலும் மீண்டும் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
உலகக் கோப்பை 2023 தொடரின் 26வது போட்டி பாகிஸ்தான் - தென் ஆப்பரிக்கா அணிகளுக்கு இடையே சென்னையில் சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த உலகக் கோப்பை தொடரின் கடைசி போட்டி இங்கு நடைபெறுவதால் மைதானம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பியுள்ளது.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். பாகிஸ்தான் அணி பவுலரான ஹசான் அலி உடல்நிலை சரியில்லாத நிலையில், அவருக்கு பதிலாக முகமது வாசிம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் லெக் ஸ்பின்னரான உஸ்மான் மிர்க்கு பதிலாக முகமது நவாஸ் அணிக்கு திரும்பியுள்ளார்.
தென் ஆப்பரிக்கா அணியிலும் முழு பிட்னஸ் அடைந்த டெம்பா பவுமா அணிக்கு திரும்பியுள்ளார். அவருக்கு பதிலாக அணியில் இடம்பிடித்த ரீசா ஹென்ட்ரிக்ஸ் பெஞ்சில் அமரவைக்கப்பட்டுள்ளார். அத்துடன் கடந்த போட்டியில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் லிசாட் வில்லியம்ஸ்க்கு பதிலாக இடது கை ஸ்பின்னரான தப்ரைஸ் ஷம்சி சேர்க்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் - தென்ஆப்பரிக்கா அணிகள் இதுவரை உலகக் கோப்பை போட்டிகளில் 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் தென்ஆப்பரிக்கா 3 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
கடைசியாக 1999இல் தான் பாகிஸ்தான் அணியை தென்ஆப்பரிக்கா வீழ்த்தியுள்ளது. இதன் பின்னர் 2015, 2019 உலகக் கோப்பை போட்டிகளில் இவ்விரு அணிகளும் மோதிக்கொண்ட நிலையில், இரண்டு முறையும் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
எனவே இரண்டு முறை தொடர் தோல்விகளுக்கு பின்னரும், 24 ஆண்டுகள் கழித்தும் மீண்டும் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி வெற்றி பெறுவதற்காக தென்ஆப்பரிக்கா காத்திருக்கிறது.
இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் விவரம்
பாகிஸ்தான்: அப்துல்லா ஷபிக், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), செளத் ஷாகில், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஷாகின் அப்ரிடி, முகமது வாசிம், ஹரிஸ் ராஃப்,
தென் ஆப்பரிக்கா: குவன்டைன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ராஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்கரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகாராஜ், தப்ரைஸ் ஷம்சி, லுங்கி இங்கிடி
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்