World Cup 2023: 50 ஓவர் கூட தாக்குபிடிக்காத பாகிஸ்தான்! தென்ஆப்பரிக்காவுக்கு 271 ரன்கள் இலக்கு
தென் ஆப்பரிக்கா பவுலிங்கை முழுமையாக 50 ஓவர்களிலும் தாக்கு பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி ஆல்அவுட்டாகியுள்ளது. அத்துடன் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கடந்த போட்டியில் எடுத்த ஸ்கோரை விட குறைவாகவே எடுத்துள்ளது.
உலகக் கோப்பை 2023 தொடரின் 26வது போட்டி பாகிஸ்தான் - தென் ஆப்பரிக்கா அணிகளுக்கு இடையே சென்னையில் சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பை தொடரின் கடைசி போட்டி இங்கு நடைபெறுவதால் மைதானம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பியுள்ளது.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 46.4 ஓவரில் 270 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியுள்ளது. பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களில் அதிகபட்சமாக செளத் ஷாகில் 52, பாபர் அசாம் 50 ஷதாப் கான் 43 ரன்கள் எடுத்தனர்.
தென் ஆப்பரிக்கா பவுலர்களில் இடது கை ஸ்பின்னரான தப்ரைஸ் ஷம்சி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மார்கோ ஜான்சன் 3, ஜெரால்ட் கோட்ஸி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி ஒரு விக்கெட்டை எடுத்தார்.
முழுமையாக 50 ஓவர்களையும் பேட் செய்யாமல் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. தென் ஆப்பரிக்கா இந்த போட்டியில் வெற்றி பெற்ற 271 ரன்கள் அடிக்க வேண்டும்.
ஓபனிங் பேட்ஸ்மேன்கள் அப்துல்லா ஷபிக், இமாம் உல் ஹக் அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்த போதிலும், 6.3 ஓவரில் இவர்கள் இருவரும் அவுட்டானார்கள். அதன் பின்னர் வந்த கேப்டன் பாபர் அசாம் நிதானமாக பேட் செய்து அரைசதம் அடித்து அவுட்டானார்.
இதற்கிடையே முகமது ரிஸ்வான் 31, இப்திகார் அகமது 21 ரன்கள் எடுத்து அவுட்டானர்கள்.
ஆறாவது விக்கெட்டுக்கு ஷதாப் கான் - செளத் ஷாகில் இணைந்து 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இவர்களை தொடர்ந்து முகமது நவாஸ் 24 ரன்கள் அடித்தார்.
கடைசி கட்டத்தில் டெயில் பேட்ஸ்மேன்கள் விரைவாக அவுட்டாக பாகிஸ்தான் 50 ஓவர்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்