World Cup 2023: ஆறு பேட்டர்கள் Single digit, 4 பேர் ரன் அவுட் - 179 ரன்களில் சரிந்த நெதர்லாந்து! அசத்திய ஆப்கானிஸ்தான்
ஆறு பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, நான்கு பேர் ரன் அவுட் என நெதர்லாந்து பேட்டிங் படையை அற்புதான பவுலிங்கால் கட்டுக்குள் கொண்டு வந்தது ஆப்கானிஸ்தான்
உலகக் கோப்பை தொடரின் 34வது போட்டி நெதர்லாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே லக்னோவிலுள்ள ஏகானா மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
நெதர்லாந்து அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனான விக்ரம்ஜித் சிங், ஸ்பின்னர் ஷாரிஸ் அகமது ஆகியோருக்கு பதிலாக ரோலோஃப் வான் டெர் மெர்வே, சாகிப் சுல்பிகர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் அணியில் நவீன் உல் ஹக்குக்கு பதிலாக கூடுதல் ஸ்பின்னர் நூர் அகமது சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி 46.3 ஓவரில் 179 ரன்களுக்கு ஆல்அவுட்டாகியுள்ளது. அந்த அணியில் நான்காவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய சைப்ராண்ட் ஏங்கல்பிரெக்ட் அரைசதமடித்து 58 ரன்கள் எடுத்து அவுட்டானார். இவரை தொடர்ந்து மேக்ஸ் ஓ டவுட் 42, கொலின் அக்கர்மேன் 29 ரன்கள் அடித்தனர். நெதர்லாந்து அணியில் 6 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகியுள்ளனர். அத்துடன் நான்கு பேட்ஸ்மேன்கள் ரன் அவுட் ஆகியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் பவுலர்களில் முகமது நபி 3, நூர் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முஜீப் உர் ரஹ்மான் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை உறுதிப்படுத்தி கொள்ள 180 ரன்களை சேஸ் செய்ய வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்