World Cup 2023 Final: ஜொலிக்கப்போவது பேட்ஸ்மேனா, பவுலரா? பைனலுக்கான அகமதாபாத் ஆடுகளம் எப்படி? - வெளியான தகவல்
உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடப்பட இருக்கும் ஆடுகளம் யாருக்கு சாதகமாக இருக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் விளையாட்டு ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடம் எதிர்பார்த்தி காத்திருக்கும் உலகக் கோப்பை 2023 தொடரின் இறுதிப்போட்டி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
உலகக் கோப்பை 2023 தொடரில் விளையாடிய 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது இந்தியா. ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை 8 வெற்றி 2 தோல்விகளை பெற்றுள்ளது.
இறுதிப்போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானத்தில் இதுவரை நடைபெற்று முடிந்திருக்கும் நான்கு போட்டிகளில் சேஸிங் செய்த அணிகளே 3 முறை வெற்றி பெற்றுள்ளன. இந்தியா - பாகிஸ்தான் மோதிய போட்டி இங்குதான் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணியை 191 ரன்களில் ஆல்அவுட் செய்த இந்தியா, 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா அணி, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இங்கு விளையாடியது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 286 ரன்கள் எடுத்த நிலையில், இங்கிலாந்து 253 ரன்களில் ஆல்அவுட்டாகி தோல்வியை தழுவியது.
எனவே இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இங்கு விளையாடிய போட்டிகளில் வெற்றியை பெற்றிருப்பது, இரு அணிகலுக்கும் சாதமான விஷயமாக அமைந்துள்ளது. இந்த சூழ்நிலையில் உலகக் கோப்பை 2023 இறுதிப்போட்டியில் விளையாடப்பட இருக்கும் ஆடுகளம் எப்படி இருக்கும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மைதானத்தை தயார் செய்த பிட்ச பராமரிப்பாளர் கூறியதாவது:
உலகக் கோப்பை இறுதி போட்டிக்காக தயார் செய்யப்ட்டிருக்கும் ஆடுகளத்தில் அதிக எடையுள்ள ரோலர் பயன்படுத்த பட்டுள்ளது. இதுவொரு கருப்பு மண் பிட்ச் ஆக உள்ளது. பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கு விதமாக ஸ்லோவாக இருக்கும். ரன்களை சேர்ப்பது எளிதாக இல்லாவிட்டாலும், கவனமுடன் பேட் செய்யும் அணி பெரிய ஸ்கோர் குவிக்கும்.
மைதானத்தின் தன்மையை வைத்து பார்த்தால் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு போட்டியில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. முதலில் பேட்டிங் செய்யும் அணியால் 315 ரன்கள் வரை சேர்க்கலாம் என கணித்துள்ளோம். அதுவே வெற்றிக்கு நல்ல ஸ்கோராக இருக்கும் என்று எங்களால் கூற முடியும்.
முதல் பேட்டிங்கை காட்டிலும் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கு ஆடுகளம் மெதுவாக செய்லபடும் என்பதால் சேசிங் செய்யும் அணிக்கு ரன்களை சேர்ப்பது சற்று சிரமமாகவே இருக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிட்ச எவ்வாறாக இருந்தாலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணி வெற்றி பெறும் என்பதால், இரு அணிகளும் தங்களது முழு திறமையும் வெளிப்படுத்தும் என நம்பலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்