World Cup 2023: வருவதும் போவதுமாக இருந்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் - பவுலிங்கில் கலக்கிய இலங்கைக்கு 157 ரன்கள் இலக்கு
இலங்கை பவுலர்களின் துல்லிய பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் வருவதும் போவதுமாக இருந்தனர் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள். இதனால் 156 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.
உலகக் கோப்பை 2023 தொடரின் 25வது போட்டி இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையே பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இங்கிலாந்து அணியில் காயமடைந்த ரீஸ் டாப்லேவுக்கு பதிலாக கிறஸ் வோக்ஸ், ஹாரி ப்ரூக், கஸ் ஆட்கின்சன் ஆகியோருக்கு பதிலாக லியாம் லிவிங்ஸ்டன், மொயின் அலி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இலங்கை அணியில் துஷான் ஹேமந்தா, சமிகா கருணரத்னே ஆகியோருக்கு பதிலாக அனுபவ ஆல்ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ், லஹிரு குமாரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து இலங்கை பவுலர்களின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 33.2 ஓவரில் 156 ரன்களுக்கு ஆவுட்டாகியுள்ளது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 43 ரன்கள் எடுத்துள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக ஓபனிங் பேட்ஸ்மேன்களான பேர்ஸ்டோ 30, டேவிட் மாலன் 28 ரன்கள் எடுத்துள்ளனர்.
இலங்கை பவுலர்களின் லஹிரு குமாரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஏஞ்சலோ மேத்யூஸ், காசுன் ரஜிதா ஆகியோர் தலா 2 விக்கெட்டை எடுத்தனர். ஸ்பின்னர் மகேஷ் தீக்ஷனா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
இலங்கை அணி வெற்றி பெற 157 ரன்களை செய்ய வேண்டும். வழக்கமாக பேட்டிங்குக்கு நன்கு சாதகமாக இருக்கும் பெங்களூரு இன்று வேகப்பந்து வீச்சுக்கு நன்கு கைகொடுத்தது. இதை சாதகமாக்கி இலங்கை பவுலர்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நன்கு நெருக்கடி அளித்தனர். பெவிலியனில் இருந்து வருவதும் பின்னர் அங்கேயே திரும்பி போவதுமாக இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இருந்தனர்.
இங்கிலாந்து அணியில் மொத்தம் 5 பேட்ஸ்மேன்கள் மட்டும் இரட்டை இலக்கத்தில் ரன்கள் அடித்தனர்.
ஆரம்பத்தில் பேர்ஸ்டோ - மாலன் இணைந்து அணிக்கு நல்ல தொடக்கம் அளித்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 45 ரன்கள் சேர்த்தனர். அதன்பின்னர் அடுத்த 40 ரன்களில் மேலும் 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது.
85 ரன்கள் எடுத்திருந்தபோது முக்கிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை இழந்த நிலையில், ஸ்டோக்ஸ் மட்டும் நிதானமாக பேட் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்தார். ஆனால் அவருக்கு கம்பெனி கொடுக்க யாரும் இல்லாத நிலையில் அவுட்டாகி வெளியேறினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்