World Cup 2023: பவுலிங்கில் விஸ்வரூபம் எடுத்த பாகிஸ்தான் - சுருண்ட வங்கதேசம்! 205 ரன்கள் இலக்கு
கட்டாயமாக வெற்றி பெற்றாக வேண்டிய போட்டியில் பாகிஸ்தான் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு வங்கதேச அணியை 204 ரன்களில் கட்டுப்படுத்தியுள்ளனர்
உலகக் கோப்பை தொடரின் 31வது போட்டி வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹாசன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இதையடுத்து முதலில் பேட் செய்த வங்கதேசம் அணி 45.1 ஓவரில் 204 ஆல்அவுட்டாகியுள்ளது. வங்கதேசம் அணியில் மஹ்மதுல்லா அரைசதமடித்து 56 ரன்கள் எடுத்தார்.
இவருக்கு அடுத்தபடியாக ஓபனிங் பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ் 45, கேப்டன் ஷாகிப் அல் ஹாசன் 43 ரன்கள் அடித்துள்ளனர். பாகிஸ்தான் பவுலர்களில் ஷாகின் அப்ரிடி, முகமது வாசிம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஹரிஸ் ராஃப் 2 விக்கெட்டுகளையும், உஸ்மான் மிர், இப்திகார் அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பாகிஸ்தான் தனது அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமானால் 205 ரன்களை சேஸ் செய்ய வேண்டும்.
வங்கதேச அணி ஓபனிங் பேட்ஸ்மேனான டன்சிட் ஹாசன் முதல் ஓவரிலேயே டக்அவுட்டாகி வெளியேறினார். இவரை தொடர்ந்து நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 4, முக்பிகுர் ரஹீம் 5 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து அவுட்டானர்கள்.
இதனால் 23 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதைத்தொடர்ந்து ஓபனிங் பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ் - மஹ்மதுல்லா இணைந்து பார்டனர்ஷிப் அமைத்து 80 ரன்கள் குவித்தனர். லிட்டன் தாஸ் 45 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
மஹ்மதுல்லா அரைசதம் அடித்த நிலையில் 56 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மிடில் ஆர்டரில் பேட் செய்த ஷாகிப் அல் ஹாசன் 43 ரன்கள் அடித்து அவுட்டாக, அதன் பிறகு மெஹ்டி ஹாசன் மிராஸ் மட்டும் 25 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். வங்கதேச பேட்ஸ்மேன்களில் நான்கு பேர் மட்டும் இரட்டை இலக்கத்தில் ரன்கள் அடித்தனர்.
கட்டாயமாக வெற்றி பெற்றாக வேண்டிய இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக பவுலிங் செய்து வங்கதேச பேட்ஸ்மேன்களை நன்கு கட்டுப்படுத்தியுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்