World Cup 2023: நெதர்லாந்துக்கு எதிராக ஹாட்ரிக் வெற்றிக்கு குறி - ஆஸி., அணியில் ஒரு மாற்றம்! டாஸ் வென்று பேட்டிங் தேர்வு
ஆஸ்திரேலியா அணியில் கேமரூன் க்ரீன் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள நிலையில், டாஸ் வென்று அந்த அணி முதலில் பேட் செய்கிறது. இதுவரை மோதியிருக்கும் இரண்டு முறையும் நெதர்லாந்தை வீழ்த்தியிருக்கும் ஆஸ்திரேலியா அணி ஹாட்ரிக் வெற்றியை பெறுவதற்கான முனைப்பில் களமிறங்குகிறது.
உலகக் கோப்பை 2023 தொடரின் 24வது போட்டி ஆஸ்திரேலியா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையே டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணியில் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கேமரூன் க்ரீன் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள ட்ராவிஸ் ஹெட் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் விளையாடவில்லை. நெதர்லாந்து அணி கடந்த போட்டியில் விளையாடி அதே அணியுடன் இன்றும் களமிறங்குகிறது.
நெதர்லாந்து விளையாடிய நான்கு போட்டிகளில் இரண்டில் சேஸிங்கிலும், ஒரு போட்டியில் முதலில் பேட் செய்தும் தோல்வியை தழுவியுள்ளது. வெற்றி பெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்திருந்தது.
ஆஸ்திரேலியா அணி விளையாடிய நான்கு போட்டிகளில் சேஸிங்கில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியும், முதல் பேட்டிங்கில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியும் சந்தித்துள்ளது. டெல்லியில் நிலவி வரும் வெயில் மற்றும் வறண்ட வானிலையை கருத்தில் கொண்டு ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இன்றைய போட்டியின் பிட்ச் நிலவரத்தை பொறுத்தவரை ஆடுகளத்தில் கடந்த போட்டியை காட்டிலும் புற்கள் குறைவாக காணப்படுகிறது. பேட்ஸ்மேன்கள் எளிதில் அடிக்கும் விதமாக பந்து செல்லலாம் என்பதால் பவுலர்களுக்கு கடினமான ஆடுகளமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதுவரை ஆஸ்திரேலியா - நெத்ர்லாந்து அணிகள் உலகக் கோப்பை போட்டிகளில் மட்டுமே நேருக்கு நேர் மோதியுள்ளன. இரண்டு முறை இவ்விரு அணிகளும் மோதிக்கொண்ட போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியே இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளது.
2007 உலகக் கோப்பை தொடருக்கு பின் 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் பலப்பரிட்சை செய்யவுள்ளன.
இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் விவரம்
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர். மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஸ்சேன், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), க்ளென் மேக்ஸ்வெல்,மார்கஸ் ஸ்டோய்னிஸ், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸாட்ர்க், ஜோஸ் ஹசில்வுட், ஆடம் ஸாம்பா
நெதர்லாந்து: விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ'டவுட், கொலின் அக்கர்மேன், பாஸ் டி லீட், தேஜா நிடமனுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), சைப்ரண்ட் ஏங்கல்பிரெச், லோகன் வான் பீக், லோகன் வான் பீக், ஆர்யன் தட், பால் வான் மீகெரென்
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்