World Cup 2023: கட்டாய வெற்றி போட்டியில் மூன்று மாற்றங்களை செய்த பாகிஸ்தான்! டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்
பாகிஸ்தான் அணி இன்று வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கான வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்பதால் மிகவும் முக்கியமான போட்டியாகவே அந்த அணிக்கு உள்ளது. வங்கதேசம் அணி சாம்பியன்ஸ் டிராபிக்கான வாய்ப்பை தக்க வைக்க பாகிஸ்தான் அணியை வீழ்த்த வேண்டும்.
உலகக் கோப்பை தொடரின் 31வது போட்டி வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹாசன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
பாகிஸ்தான் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஓபனிங் பேட்ஸ்மேன் இமாம் உல் ஹக், ஷதாப் கான், முகமது நவாஸ் ஆகியோருக்கு பதிலாக ஃபகர் ஸமான், அகா சல்மான், உஸ்மா மிர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் அணியில் இன்று கூடுதலாக ஒரு பவுலர் இடம்பிடித்துள்ளார். வங்கதேச அணியில் மகேதி ஹாசனுக்கு பதிலாக டவ்ஹித் ஹிர்தோய் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது போட்டியாக பாகிஸ்தான் - வங்கதேசம் மோதும் அணிகளின் போட்டி அமைந்துள்ளது. முதல் பேட்டியில் நெதர்லாந்து - வங்கதேசம் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது. இதையடுத்து இன்றைய போட்டியில் டாஸ் வென்றவுடன் வங்கதேசம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
வங்கதேசம் அணி 1999 முதல் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று வருகிறது. அந்த தொடரில் வங்கதேசம் வென்ற ஒரே போட்டி பாகிஸ்தானுக்கு எதிராக அமைந்தது. உலகக் கோப்பை முதல் வெற்றியேலேயே பாகிஸ்தான் அணியை அப்செட் செய்தது. இதுவரை உலகக் கோப்பை தொடரில் இரண்டு போட்டிகளில் இந்த இரு அணிகளும் இரண்டு போட்டிகளில் விளையாடியிருக்கும் நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது.
அத்துடன் இன்றைய போட்டி இரு அணிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக அமைந்துள்ளது. பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை வீழ்த்தினால் மட்டும் அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க முடியும். அதே போல் வங்கதேச அணி இன்று வெற்றி பெற்றால் தான் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தகுதி பெறும் வாய்ப்பை உறுதிப்படுத்த முடியும். எனவே இன்றைய ாட்டம் பரபரப்பாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் விவரம்
வங்கதேசம்: லிட்டன் தாஸ், தன்சித் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), மஹ்மதுல்லா, டவ்ஹித் ஹிர்தோய், மெஹிதி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம்
பாகிஸ்தான்: அப்துல்லா ஷபிக், ஃபகர் ஸமாம், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), செளத் ஷாகில், இப்திகார் அகமது, அகா சல்மான், ஷாகின் அப்ரிடி, உஸ்மா மிர், முகமது வாசிம், ஹரிஸ் ராஃப்
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்