World Cup 2023: ஆஸ்திரேலியா அதிரடியை நன்கு கட்டுப்படுத்திய நியூசிலாந்து பவுலர்கள்! 389 ரன்கள் இலக்கு
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  World Cup 2023: ஆஸ்திரேலியா அதிரடியை நன்கு கட்டுப்படுத்திய நியூசிலாந்து பவுலர்கள்! 389 ரன்கள் இலக்கு

World Cup 2023: ஆஸ்திரேலியா அதிரடியை நன்கு கட்டுப்படுத்திய நியூசிலாந்து பவுலர்கள்! 389 ரன்கள் இலக்கு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Oct 28, 2023 02:27 PM IST

வார்னர், ட்ராவிஸ் ஹெட் வெளிப்படுத்திய அதிரடியால் ஆஸ்திரேலியா 450 ரன்களுக்கு மேல் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நியூசிலாந்து பவுலர்கள் கம்பேக் கொடுத்து 388 ரன்களில் கட்டுப்படுத்தியுள்ளனர். இருப்பினும் சாதனை சேஸ் செய்தால் மட்டுமே நியூசிலாந்து வெற்றி பெற முடியும்.

நியூசிலாந்துக்கு எதிராக அதிரடி காட்டிய மேக்ஸ்வெல் 41 ரன்கள் அடித்தார்
நியூசிலாந்துக்கு எதிராக அதிரடி காட்டிய மேக்ஸ்வெல் 41 ரன்கள் அடித்தார்

இதையடுத்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 49.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 388 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரிலேயா அணியில் அதிகபட்சமாக ட்ராவிஸ் ஹெட் 109, டேவிட் வார்னர் 81, மேக்ஸ் வெல் 41 ரன்கள் எடுத்தனர். 

ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் 14 பந்துகளில் 37 ரன்கள் அடித்து அற்புதமான கேமியோ இன்னிங்சை வெளிப்படுத்தினார்.

தொடக்கம் முதலே அதிரடி காட்டிய வார்னர் - ஹெட் ஆகியோர் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 175 ரன்கள் சேர்த்தனர்.

நியூசிலாந்து பவுலர்களில் ட்ரெண்ட் போல்ட், கிளென் பிளிப்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அந்த அணியின் ஸ்டிரைக் பவுலராக இருந்து வந்த சாண்ட்னர் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய போதிலும் 80 ரன்களை வாரி வழங்கியுள்ளார். மேட் ஹென்றி, ஜேமி நீஷம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

நியூசிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் தனது இடத்தை தக்க வைத்து கொள்ள வேண்டுமானால் 389 ரன்கள் என சாதனை சேஸ் செய்ய வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.