AUS vs NZ Preview: புள்ளிப்பட்டியலில் நியூசி., டாப், மொத்தமாக ஆஸி., டாப்! பலத்தை நிருபித்து முன்னேற போவது யார்?
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Aus Vs Nz Preview: புள்ளிப்பட்டியலில் நியூசி., டாப், மொத்தமாக ஆஸி., டாப்! பலத்தை நிருபித்து முன்னேற போவது யார்?

AUS vs NZ Preview: புள்ளிப்பட்டியலில் நியூசி., டாப், மொத்தமாக ஆஸி., டாப்! பலத்தை நிருபித்து முன்னேற போவது யார்?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Oct 28, 2023 09:37 AM IST

நியூசிலாந்து அணி நல்ல பார்மில் இருந்தாலும், ஆஸ்திரேலியா அந்த அணிக்கு எதிராக உலகக் கோப்பை போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. எனவே தங்களது பலத்தை நிருபிக்கும் விதமாக இரு அணிகளும் முழு திறமையை இன்றைய போட்டியில் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரிட்சை
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரிட்சை

ஆஸ்திரேலியா அணி முதலில் இரண்டு தோல்விகளை சந்தித்தாலும், அடுத்து ஹாட்ரிக் வெற்றியை பெற்று தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ளது. தற்போது புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்து வருகிறது. பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில்,  அந்த அணி கச்சிதமாக இருந்து வருகிறது. 

மோசமாக இருந்த மிடில் ஆர்டர் பேட்டிங்கை, நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் சாதனை சதம் மூலம் நிவர்த்தி செய்தார் க்ளென் மேக்ஸ்வெல். எனவே தற்போது ஆஸ்திரேலியா அணியின் வலிமை, இந்த உலகக் கோப்பை தொடரின் தொடக்கத்தில் இருந்ததை விட மோலோங்கியுள்ளது.

ட்ராவிஸ் ஹெட் முழு பிட்னஸ் பெற்றிருக்கும் நிலையில் அவரை இன்றைய போட்டியில் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் கடந்த போட்டியை காயத்தால் மிஸ் செய்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் இன்றைய போட்டியில் மீண்டும் களமிறங்கலாம்.

நியூசிலாந்தை பொறுத்தவரை 5 போட்டிகளில் நான்கு வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் நான்கு தொடர் வெற்றிகளை பெற்ற முதல் அணியாக இருந்து வந்த நியூசிலாந்தின் வெற்றிப்பயணத்துக்கு, கடந்த போட்டியில் இந்தியா முட்டுக்கட்டை போட்டது. 

நியூசிலாந்து அணி தனது முதல் தோல்வியை சந்தித்த அதே தரம்சாலா மைதானத்தில் இன்று ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. எனவே ஏற்கனவே விளையாடிய சூழ்நிலையை சாதகமாக்கி கொள்ள முயற்சிக்கும். கேன் வில்லியம்சான் காயம் காரணமாக இன்றைய போட்டியிலும் விளையாடப்போவதில்லை. எனவே டாம் லாதம் கேப்டன்சியை தொடருவார்.

அத்துடன் வெற்றி கூட்டணியை தொடர்ந்து வரும் நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் அதே அணியுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கலாம். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் பக்காவாக செயல்படும் அணியாக நியூசிலாந்து இருந்து வருகிறது. அதற்கு ஏற்ப வீரர்களும் நல்ல பார்மில் உள்ளார்கள்.

பிட்ச் நிலவரம்

தரம்சாலா மைதானத்தில் முதல் பேட்டிங்கை காட்டிலும் சேஸிங் செய்யவே டாஸ் வெல்லும் அணிகள் விரும்புகின்றன. இங்கு நடைபெற்ற 4 போட்டிகளிலும் டாஸ் வென்ற அணிகள் சேஸிங்கை தேர்வு செய்ததது. இரண்டு போட்டிகள் முதலில் பேட் செய்த அணியும், இரண்டு போட்டிகள் சேஸிங் செய்த அணியும் வென்றுள்ளன.

தரம்சாலா ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பிரதான பவர்ப்ளே ஓவர்களில் முதல் பேட்டிங், சேஸிங் என இரண்டு இன்னிங்ஸ்சிலும் நன்கு ஸ்விங் ஆகி சாதகமாக செயல்பட்டுள்ளது. எனவே அந்த ஓவர்களை சமாளித்து விட்டால் பேட்ஸ்மேன்கள் ராஜ்ஜியம் நடத்திவிடலாம். இன்றைய போட்டியிலும் ஆரம்பத்தில் பவுலர்களுக்கும், பின்னர் பேட்ஸ்மேன்களுக்கு பிட்ச் ஒத்துழைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை போட்டிகளில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் இதுவரை 11 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 8, நியூசிலாந்து 3 முறை வெற்றி பெற்றுள்ளன. 1987 முதல் 2019 வரை 9 உலகக் கோப்பை தொடர்களிலும் இவ்விரு அணிகளும் மோதியுள்ளன.

கடந்த 2019 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணியே வெற்றி பெற்றுள்ளது. ஆனால் தற்போது நியூசிலாந்து அணி இருக்கும் பார்முக்கு ஆஸ்திரேலியா அணி வெற்றி பெறுவதற்கு கடும் சவாலை சந்திக்க நேரிடும்.

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் 8 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்துக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.  அதேபோல் நியூசிலாந்து வென்றால் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு செல்லும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.