AUS vs ENG Preview: இரண்டு டாப் வீரர்கள் இல்லை..! ஆஸ்திரேலியா அரையிறுதி வாய்ப்பை தட்டிப்பறிக்கும் இடத்தில் இங்கிலாந்து
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Aus Vs Eng Preview: இரண்டு டாப் வீரர்கள் இல்லை..! ஆஸ்திரேலியா அரையிறுதி வாய்ப்பை தட்டிப்பறிக்கும் இடத்தில் இங்கிலாந்து

AUS vs ENG Preview: இரண்டு டாப் வீரர்கள் இல்லை..! ஆஸ்திரேலியா அரையிறுதி வாய்ப்பை தட்டிப்பறிக்கும் இடத்தில் இங்கிலாந்து

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 04, 2023 06:20 AM IST

World Cup 2023, AUS vs ENG Preview: ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு தகுதி பெறவும், இங்கிலாந்து சாம்பியன்ஸ் டிராபி கோப்பை தொடரில் தகுதி பெறுவதை உறுதிப்படுத்திக்கொள்ளும் விதமாகவும் இன்று நடைபெறும் போட்டி அமைகிறது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இன்று பலப்பரிட்சை

உலகக் கோப்பை 2023 தொடரில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மோதலாக அமைந்த இந்த ஆட்டம், தற்போது உப்புச்சப்பில்லாமல் நடைபெற இருக்கிறது. இதற்கு காரணமாக நடப்பு சாம்பியனான இங்கிலாந்து மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பதுடன், சாம்பியன்ஸ் டிராபி தொடரிலாவது தகுதி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் உள்ளது.

பேட்டிங், பவுலிங், பீல்டிங் என சிறந்த அணியை கொண்டிருக்கும் இங்கிலாந்து, மோசமான செயல்பாட்டால் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இன்று நடைபெறும் போட்டி உள்பட எஞ்சிய போட்டிகளில் வென்றாலும் இங்கிலாந்துக்கு எந்த ஒரு மாற்றமும் ஏற்படபோவதில்லை. மாறாக இனி இங்கிலாந்திடம் தோல்வியடையும் எதிரணி சிக்கல்களையும், நெருக்கடியையும் சந்திக்க நேரிடலாம்.

இங்கிலாந்து தனது அணியில் இருக்கும் அனைத்து வீரர்களுக்கு வாய்ப்பு அளித்தபோதிலும், வெற்றியை எட்டிபிடிப்பதில் சிரமத்தை சந்தித்து வருகிறது. விளையாடிய 6 போட்டிகளில், ஒரேயொரு வெற்றியை மட்டும் பெற்றுள்ளது.

மறுபுறம் ஆஸ்திரேலியா முதல் இரண்டு போட்டிகளில் தோல்விகளை சந்தித்த போதிலும் அடுத்து விஸ்வரூபம் எடுத்து நான்கு வெற்றிகளை அடுத்தடுத்து பெற்றுள்ளது. ஒவ்வொரு போட்டிகளில் அணியில் இருந்து குறைகளை சரிசெய்து தற்போது முழுமையான அணியாக உருவெடுத்துள்ளது.

கடந்த இரு நாள்களுக்கு முன்னர் கோல்ப் வண்டியிலிருந்து கீழே விழுந்த மேக்ஸ்வெலுக்கு காயம் ஏற்பட்டிருப்பதால் அவர் இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என தெரிகிறது. பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கைகொடுத்து வந்த அவர் அணியில் இல்லாதது இழப்பாகவே அமைந்துள்ளது. மிட்செல் மார்ஷ் சொந்த காரணங்களுக்காக நாடு திரும்பியுள்ளதால் அவரும் விளையாடப்போவதில்லை.

இந்த இரண்டு பெரும் தலைகள் இல்லாமல் இருப்பது இங்கிலாந்துக்கு சாதகமான விஷயமாகவே உள்ளது. இதை நன்கு பயன்படுத்தி கொள்வதன் மூலம் இங்கிலாந்து மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பலாம்.

உலகக் கோப்பை தொடரின் 36வது போட்டி ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் இன்று நடைபெறுகிறது. பகலிரவு போட்டியாக நரேந்திர மோடி மைதானத்தில் 2 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

உலகக் கோப்பை 2023 தொடரில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மோதலாக அமைந்த இந்த ஆட்டம், தற்போது உப்புச்சப்பில்லாமல் நடைபெற இருக்கிறது. இதற்கு காரணமாக நடப்பு சாம்பியனான இங்கிலாந்து மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பதுடன், சாம்பியன்ஸ் டிராபி தொடரிலாவது தகுதி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் உள்ளது.

பேட்டிங், பவுலிங், பீல்டிங் என சிறந்த அணியை கொண்டிருக்கும் இங்கிலாந்து, மோசமான செயல்பாட்டால் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இன்று நடைபெறும் போட்டி உள்பட எஞ்சிய போட்டிகளில் வென்றாலும் இங்கிலாந்துக்கு எந்த ஒரு மாற்றமும் ஏற்படபோவதில்லை. மாறாக இனி இங்கிலாந்திடம் தோல்வியடையும் எதிரணி சிக்கல்களையும், நெருக்கடியையும் சந்திக்க நேரிடலாம்.

இங்கிலாந்து தனது அணியில் இருக்கும் அனைத்து வீரர்களுக்கு வாய்ப்பு அளித்தபோதிலும், வெற்றியை எட்டிபிடிப்பதில் சிரமத்தை சந்தித்து வருகிறது. விளையாடிய 6 போட்டிகளில், ஒரேயொரு வெற்றியை மட்டும் பெற்றுள்ளது.

மறுபுறம் ஆஸ்திரேலியா முதல் இரண்டு போட்டிகளில் தோல்விகளை சந்தித்த போதிலும் அடுத்து விஸ்வரூபம் எடுத்து நான்கு வெற்றிகளை அடுத்தடுத்து பெற்றுள்ளது. ஒவ்வொரு போட்டிகளில் அணியில் இருந்து குறைகளை சரிசெய்து தற்போது முழுமையான அணியாக உருவெடுத்துள்ளது.

கடந்த இரு நாள்களுக்கு முன்னர் கோல்ப் வண்டியிலிருந்து கீழே விழுந்த மேக்ஸ்வெலுக்கு காயம் ஏற்பட்டிருப்பதால் அவர் இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என தெரிகிறது. பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கைகொடுத்து வந்த அவர் அணியில் இல்லாதது இழப்பாகவே அமைந்துள்ளது. மிட்செல் மார்ஷ் சொந்த காரணங்களுக்காக நாடு திரும்பியுள்ளதால் அவரும் விளையாடப்போவதில்லை.

இந்த இரண்டு பெரும் தலைகள் இல்லாமல் இருப்பது இங்கிலாந்துக்கு சாதகமான விஷயமாகவே உள்ளது. இதை நன்கு பயன்படுத்தி கொள்வதன் மூலம் இங்கிலாந்து மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பலாம்.

பிட்ச் நிலவரம்

அகமதாபாத்தில் கருப்பு மணல், செம்மண் என இரண்டு ஆடுகளங்களும் உள்ளன, இதில் கருப்பு மணல் ஸ்லோ விக்கெட்டாகவும், செம்மண் வேகப்பந்து வீச்சு, பவுன்ஸ் ஆகியவற்றுக்கு ஒத்துழைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத்தில் வறண்ட வானிலை நிலவும் எனவும், மாலை நேரத்தில் பனிப்பொலிவு ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்றைய போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிகிறது.

உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் 9 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 6, இங்கிலாந்து 3 முறை வெற்றி பெற்றுள்ளன. இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு அரையிறுதி வாய்ப்பை பெறுவதற்கான நாக்அவுட் போன்றும், இங்கிலாந்துக்கு சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெறுவதை உறுதி செய்யும் போட்டியாக உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9  

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.