World Cup 2023: இலங்கை அணியில் 2 மாற்றங்கள்! மூன்று மாற்றங்களுடன் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்
கடந்த போட்டியில் செய்த தவறை செய்யாமல் டாஸ் வென்று இந்த முறை பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர். மும்பை போல் பெங்களூருரிலும் வெயில் வாட்டி வதைப்பதால் முதலில் பேட் செய்து பெரிய ஸ்கோரை இலங்கைக்கு இலக்காக நிர்ணயிக்கும் முடிவில் இங்கிலாந்து களமிறங்கிறது.
உலகக் கோப்பை 2023 தொடரின் 25வது போட்டி இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையே பெங்களூருவில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இங்கிலாந்து அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. காயமடைந்த ரீஸ் டாப்லேவுக்கு பதிலாக கிறஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ஹாரி ப்ரூக், கஸ் ஆட்கின்சன் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக லியாம் லிவிங்ஸ்டன், மொயின் அலி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இலங்கை அணியில் துஷான் ஹேமந்தா, சமிகா கருணரத்னே ஆகியோருக்கு பதிலாக அனுபவ ஆல்ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ், லஹிரு குமாரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய போட்டியாக உள்ளது. தென் ஆப்பரிக்காவுக்கு எதிராக மும்பையில் நடந்த கடந்த போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்து இங்கிலாந்து படுதோல்வியை சந்தித்தது. அங்கு நிலவிய கடுமையான வெயில் காரணமாக மோசமான பவுலிங்கை வெளிப்படுத்தியது. ஆனால் இன்றைய போட்டியில் டாஸ் வென்று தெளிவாக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இரு அணிகளும் விளையாடிய நான்கு போட்டிகளில் தலா ஒரு வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடத்தில் உள்ளது. இலங்கை அணி ரன் ரேட் அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.
இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் விவரம்:
இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மாலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டன், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, அடில் ரிஷத், மார்க் வுட்
இலங்கை: பாத்தும் நிஸ்ஸங்க, குசால் பெரேரா, குசால் மெண்டிஸ் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்ஜெயா டி சில்வா, ஏஞ்சலோ மேத்யூஸ், மகேஷ் தீக்ஷனா, கசுன் ராஜித, தில்ஷான் மதுஷங்க, லஹிரு குமாரா
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்