AFG vs NED Preview: அரையிறுதி ரேஸில் முந்தப்போவது யார்? நெதர்லாந்து - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Afg Vs Ned Preview: அரையிறுதி ரேஸில் முந்தப்போவது யார்? நெதர்லாந்து - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்

AFG vs NED Preview: அரையிறுதி ரேஸில் முந்தப்போவது யார்? நெதர்லாந்து - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 03, 2023 06:10 AM IST

World Cup 2023, AFG vs NED Preview: முதல் முறையாக நெதர்லாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் உலகக் கோப்பை போட்டியில் இன்று பலப்பரிட்ச்சை செய்யவுள்ளன. இரு அணிகளும் அரையிறுதி ரேஸில் இருப்பதால் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக இது அமைந்துள்ளது

முதல் முறையாக உலகக் கோப்பை போட்டியில் பலப்பரிட்சை செய்யும் ஆப்கானிஸ்தான் - நெதர்லாந்து
முதல் முறையாக உலகக் கோப்பை போட்டியில் பலப்பரிட்சை செய்யும் ஆப்கானிஸ்தான் - நெதர்லாந்து

உலகக் கோப்பை 2023 தொடரில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக பலம் வாய்ந்த ஆசிய அணியாக பாகிஸ்தான் ஜொலித்து வருகிறது. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன் அணிகளான பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கான வாய்ப்பை இழக்காமல் உள்ளது.

ஓர் அணியாக சிறப்பாக செயல்பட்டு வரும் ஆப்கானிஸ்தான், இந்த உலகக் கோப்பை தொடரில் எதிரணியிடம் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் அணியாகவும் இருந்து வருகிறது. பவுலிங்கை காட்டிலும் பேட்டிங்கில் வலுவான அணியாக இருந்து வரும் ஆப்கானிஸ்தான் இரண்டு போட்டிகளை சேஸிங்கில் வெற்றி பெற்றுள்ளது.

விளையாடிய 6 போட்டிகளில் 3 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தான் இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற்றால், அரையிறுதி வாய்ப்பையும் பெறலாம். அந்த வகையில் ஆப்கானிஸ்தான் அணிக்கான ரேஸில் முன்னேற்றம் பெறுவதற்கான முக்கிய போட்டியாக நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டம் அமைந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியின் ஸ்டார் வீரரான ரஷித் கான், பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தும் ஆட்டத்தை உலகக் கோப்பை தொடரில் இதுவரை வெளிப்படுத்தாமல் உள்ளார். எனவே அவரது தனது பார்மை இன்றைய போட்யில் மீட்பார் என எதிர்பார்க்கலாம்

இதையடுத்து நெதர்லாந்து விளையாடி 6 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. உலகக் கோப்பை 2023 தொடரில் உச்சகட்ட பார்மில் இருக்கும் தென் ஆப்பரிக்காவை வீழ்த்திய ஒரே அணியாக நெதர்லாந்து உள்ள நிலையில், கடந்த போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை விட்டு நாக்அவுட் செய்தது.

நெதர்லாந்து அணிக்கு அரையிறுதிக்கான வாய்ப்பு என்பது குறைவு என்றாலும், இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற்று மற்ற அணிகளின் முடிவுகளை பொறுத்து அதுவும் அமைய வாய்ப்பு உள்ளது. மிக முக்கியமாக சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு வாய்ப்பை உறுதிப்படுத்தி கொள்ளவும் நெதர்லாந்து அணிக்கு வெற்றி முக்கியமானதாக அமைகிறது.

பிட்ச் நிலவரம்

பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சவால் மிக்க ஆடுகளமாக இருந்து வரும் லக்னோவில் கருப்பு மற்றும் செம்மண் ஆடுகளத்தை கொண்டதாக உள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களை காட்டிலும் ஸ்பின்னர்களுக்கு நன்கு உதவும் என கணிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளிலும் சிறந்த ஸ்பின்னர்கள் இருப்பதால் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என தெரிகிறது.

பகல் நேரத்தில் வெப்பம் 30 டிகிரி வரையில், இரவு நேரத்தில் கிட்டத்தட்ட பாதியாக குறைந்து 17 டிகிரி வரை செல்லும் எனவும், மழைக்கான வாய்ப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் முதல் முறையாக உலகக் கோப்பை தொடரி பலப்பரிட்சை செய்ய இருக்கின்றன. ஒரு நாள் போட்டிகளிலும் இவ்விரு அணிகளும் 9 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஆப்கானிஸ்தான் 7, நெதர்லாந்து 2 முறை வெற்றி பெற்றுள்ளன. இந்த இரண்டு அணிகளிலும் முதல் உலகக் கோப்பை

போட்டி வெற்றியை யார் ருசிக்க உள்ளார்கள் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.