நிமிர விட்டு அடித்த சிங்கப்பெண்கள்; சுருண்டு விழுந்த தென்னாப்பிரிக்கா -மகளிர் டி20 உலகக்கோப்பையில் நியூலாந்து சாம்பியன்!
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  நிமிர விட்டு அடித்த சிங்கப்பெண்கள்; சுருண்டு விழுந்த தென்னாப்பிரிக்கா -மகளிர் டி20 உலகக்கோப்பையில் நியூலாந்து சாம்பியன்!

நிமிர விட்டு அடித்த சிங்கப்பெண்கள்; சுருண்டு விழுந்த தென்னாப்பிரிக்கா -மகளிர் டி20 உலகக்கோப்பையில் நியூலாந்து சாம்பியன்!

Kalyani Pandiyan S HT Tamil
Oct 20, 2024 11:29 PM IST

9 ஆவது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், 32 ரன்னில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது நியூலாந்து அணி!

நிமிர விட்டு அடித்த சிங்கப்பெண்கள்.. சுருண்டு விழுந்த தென்னாப்பிரிக்கா! -மகளிர் டி20 உலகக்கோப்பை நியூலாந்து சாம்பியன்!
நிமிர விட்டு அடித்த சிங்கப்பெண்கள்.. சுருண்டு விழுந்த தென்னாப்பிரிக்கா! -மகளிர் டி20 உலகக்கோப்பை நியூலாந்து சாம்பியன்!

வெளியேற்றப்பட்ட இந்தியா!

லீக் சுற்றுகளின் முடிவில், ஏ பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளும் முதல் 2 இடங்களை பிடித்தன. அதன் அடிப்படையில் அந்த அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்தன. இதர அணிகளான வங்கதேசம், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து அணிகள் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டன.

இதனையடுத்து நடைபெற்ற அரையிறுதிக்கான போட்டியில் ஆஸ்திரேலியாவை தென்னாப்பிரிக்காவும், வெஸ்ட் இண்டீசை நியூசிலாந்தும் வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இந்த நிலையில் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான இறுதி போட்டி இன்றைய தினம் துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்வதாக அறிவிக்க, நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

அதிரடி காட்டிய நியூசிலாந்து

நியூசிலாந்தின் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக, சுசி பேட்ஸ் மற்றும் ஜார்ஜியா ப்ளிம்மர் களமிறங்கினர். வந்த வேகத்தில் ப்ளிம்மர் 9 ரன்னிலும், அடுத்து வந்த சோபி டெவின் 6 ரன்னிலும் அவுட் ஆகி அதிர்ச்சிக்கொடுத்தனர். ஒரு கட்டத்தில் நம்பிக்கையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சுசி பேட்ஸூம் 32 ரன்னில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இதனால் நியூசிலாந்து தள்ளாட்டம் கண்டது. இதையடுத்து வந்த அமெலியா கெர் மற்றும் ப்ரூக் ஹாலிடே ஜோடி அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

ஹாலிடே 38 ரன்னிலும், கெர் 43 ரன்னிலும் அவுட் ஆக, தொடர்ந்து வந்த மேடி கிரீன் மற்றும் இசபெல்லா கேஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் நியூசிலாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 158 ரன்கள் எடுத்தது. 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தொடங்கியது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் லாரா வோல்வார்ட் மற்றும் டாஸ்மின் ப்ரிட்ஸ் களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை கொடுத்த போதும், அடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த வகையில் நியூசிலாந்து அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதன் முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.