SL vs IND 3rd T20 Preview: இந்தியா-இலங்கை 3வது T20I போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள்?
Suryakumar Yadav: ஞாயிற்றுக்கிழமை நடந்த மற்றொரு மேட்ச்சில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் DLS முறைப்படி வென்றது. மழை காரணமாக டார்கெட் குறைக்கப்பட்ட நிலையில், அதை எட்டி இந்திய அணி வென்றது. தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
Ind vs SL 3rd T20: ஜூலை 30, 2024 அன்று பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா இலங்கையை எதிர்கொள்கிறது.
இந்திய கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி இலங்கை சுற்றுப் பயணம் சென்றுள்ளது.
சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தனது முதல் தொடரை வழிநடத்துகிறார்.
கடந்த சனிக்கிழமை நடந்த முதல் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவும்,இலங்கையும் மோதின. இதில், இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது.
அந்த மேட்ச்சில் கேப்டன் சூர்யகுமார் யாதவ், 58 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருதையும் வென்றார். விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 49 ரன்கள் எடுத்தார்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த மற்றொரு மேட்ச்சில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் DLS முறைப்படி வென்றது.
மழை காரணமாக டார்கெட் குறைக்கப்பட்ட நிலையில், அதை எட்டி இந்திய அணி வென்றது. தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
கடைசி மற்றும் 3வது டி20 இன்று நடைபெறவுள்ளது. பல்லேகெலோவில் தான் இந்த மேட்ச்சும் நடக்கிறது. இன்றிரவு 7 மணிக்கு மேட்ச் தொடங்குகிறது.
2வது டி20இல் ரவி பிஷ்ணோய் 3 விக்கெட்டுகளை சுருட்டினார். அவர் தான் மேன் ஆஃப் தி மேட்ச் விருதையும் தட்டிச் சென்றார்.
இலங்கை அணி
சரித் அசலங்க (கேப்டன்), பதும் நிசங்கா, குசல் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, குசால் மெண்டிஸ், தினேஷ் சண்டிமால், கமிந்து மெண்டிஸ், தசுன் ஷனகா, வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷன, சமிந்து விக்ரமசிங்க, மதீஷா ஃபிரண்டன், மதீஷா பத்திரனன், பிண்டோ பத்திரனன், குசால் மெண்டிஸ்
இந்திய அணி
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரின்கு சிங், ரியான் பராக், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது சிராஜ்
முன்னதாக, 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த இலங்கை 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குசால் பெராரே 53, பதும் நிசாங்கா 32, கமிந்து மெண்டிஸ் 26 ரன்கள் எடுத்தனர்.
இந்திய பவுலர்களில் ஆரம்பத்தில் ரன்களை விட்டுக்கொடுத்த போதிலும், பின்னர் கடைசி கட்டத்தில் துல்லிமாக பவுலிங் செய்து இலங்கை ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர். இந்திய பவுலர்களில் ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
மழை குறுக்கீடு
இதைத்தொடர்ந்து 162 ரன்கள் என்ற இலக்கை சேஸ் செய்ய களமிறங்கிய இந்திய இன்னிங்ஸில் ஆட்டத்தில் மூன்றாவது பந்திலேயே மழை குறுக்கீடு ஏற்பட்டது. அப்போது அணியின் ஸ்கோர் விக்கெட் இழப்பின்றி 6 என இருந்தது. இதன் பின்னர் சுமார் ஒரு மணி நேரம் தாமதத்துக்கு பிறகு போட்டியானது மீண்டும் தொடங்கியது.
டிஎல்எஸ் விதிப்படி இலக்கில் மாற்றம்
இந்திய அணியின் வெற்றி இலக்கை டிஎல்எஸ் விதிப்படி மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி 8 ஓவரில் 72 ரன்கள் எடுத்தால் வெற்றி என புதிய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த ஸ்கோரை சேஸ் செய்த இந்தியா 6.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இரண்டாவது டி20 போட்டியிலும் இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
டாபிக்ஸ்