தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Saurabh Netravalkar: அற்புத பவுலிங்கால் பாகிஸ்தானை அப்செட் செய்த ஆராக்கிள் இன்ஜினியர்! யார் இந்த செளரப் நெட்ரவால்கர்?

Saurabh Netravalkar: அற்புத பவுலிங்கால் பாகிஸ்தானை அப்செட் செய்த ஆராக்கிள் இன்ஜினியர்! யார் இந்த செளரப் நெட்ரவால்கர்?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 07, 2024 05:41 PM IST

முதல் மோதலிலேயே தனது அற்புத பவுலிங்கால் பாகிஸ்தானை அப்செட் செய்த யுஎஸ்ஏ பவுலர் செளரப் நெட்ரவால்கர், பிரபல சாப்ட்வேர் நிறுவனமான ஆராக்கிள் இன்ஜினியர் என்பது பலருக்கும் சர்ப்ரைசான விஷயமாகவே உள்ளது.

அற்புத பவுலிங்கால் பாகிஸ்தானை அப்செட் செய்த ஆராக்கிள் இன்ஜினியர்! யார் இந்த செளரப் நெட்ரவால்கர்
அற்புத பவுலிங்கால் பாகிஸ்தானை அப்செட் செய்த ஆராக்கிள் இன்ஜினியர்! யார் இந்த செளரப் நெட்ரவால்கர் (Getty Images)

ட்ரெண்டிங் செய்திகள்

தலைப்பு செய்தியாக மாறிய பாகிஸ்தான் தோல்வி

யுஎஸ்ஏ அணியின் கேப்டனும் பேட்ஸ்மேனுமான மோனாக் படேல் 50 ரன்கள் அடித்து பேட்டிங்கில் பங்களிப்பு தர, 2010இல்யு19 உலகக் கோப்பை தொடரில் இந்திய யு19 அணியில் விளையாடிய செளரப் நெட்ரவால்கர் பவுலிங்கில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, சூப்பர் ஓவரிலும் பாகிஸ்தான் அணியை சேஸ் செய்ய விடாமல் கட்டுப்படுத்தினார்.

பாகிஸ்தான் அணியை முதல் போட்டியிலேயே வீழ்த்தி யுஎஸ்ஏ அணியும், அதற்கு காரணமாக இருந்த நெட்ரவால்கரும் தலைப்பு செய்தியாக மாறியுள்ளனர். அடிப்படையில் நெட்ரவால்கர், ஆராக்கிள் நிறுவனத்தில் கோடிங் செய்யும் சாப்ட்வேர் இன்ஜினியராக இருந்து வரும் நிலையில், தற்போது கிரிக்கெட் விளையாட்டில் அற்புதம் நிகழ்த்தி உலக அளவில் பேசப்படும் வீரராக மாறியுள்ளார்.

யார் இந்த நெட்ரவால்கர்?

கடந்த 1991இல் மும்பையில் பிறந்த நெட்ரவால்கர், இந்திய வம்சாவளி வீரராக யுஎஸ்ஏ அணியில் விளையாடி வருகிறார். இந்தியாவில் ஏராளமான உள்ளூர் கிரிக்கெட் விளையாடியிருக்கும் இவர் 2010 யு19 உலகக் கோப்பை தொடரில், இந்திய யு19 அணிக்காக விளையாடியுள்ளார்.

2015இல் யுஎஸ்ஏ சென்ற இவர், அதற்கு முன்னர் மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டும் விளையாடியுள்ளார். இந்திய அணி வீரர்களான கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், ஹர்ஷல் படேல், ஜெயதேவ் உனத்கட், சந்தீப் ஷர்மா உள்ளிடோருடன் இவர் விளையாடி இருக்கிறார்.

14 ஆண்டுகளுக்கு பிறகு பழிக்கு பழி

கடந்த 2010 யு19 உலகக் கோப்பை தொடரில் கேஎல் ராகுல் தலைமையிலான இந்தியா யு19 அணி, பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் யு19 அணியை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த போட்டியில் பாகிஸ்தான் 2 விக்கெட், 3 பந்துகள் எஞ்சியிருக்க த்ரில் வெற்றியை பெற்றது. அந்த போட்டியில் இடம்பிடித்திருந்த நெட்ரவால்கர், 5 ஓவர் 1 மெய்டன், 16 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தார்.

இந்த தோல்விக்கு 14 ஆண்டுகள் கழித்து தற்போது பதிலடி தந்துள்ளார் நெட்ரவால்கர். தற்போது அவர் யுஎஸ்ஏ அணிக்காக விளையாடியபோதிலும், டி20 உலகக் கோப்பை வென்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் மோதிலில் தற்போது அற்புத பவுலிங்கால் தோல்வி அடைய செய்துள்ளார்.

 

எம்எஸ் கம்யூட்டர் சயின்ஸ் படித்த நெட்ரவால்கர்

இடது கை வேகப்பந்து வீச்சாளரான செளரப் நெட்ரவால்கர் கார்ன்வெல் பல்கலைகழகத்தில் எம்எஸ் கம்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு, மும்பையில் இளங்கலை பட்டம் படித்து முடித்துள்ளார்.

தற்போது அமெரிக்காவில் இருக்கும் ஆராக்கிள் நிறுவனத்தில் டெக்கியாக பணிபுரிந்து வரும் இவர், டி20 உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன் ஜூன் 17ஆம் தேதி வரை ஆபிஸுக்கு வரப்போவதில்லை என தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் 17இல் குரூப் பிரிவு போட்டிகள் நிறைவடைகின்றன. இதற்கிடையே நெட்ரவால்கர் இந்த பார்ம்வை வைத்து அவரது விடுமுறையை நீடிக்க நேரிடும் என இணையவாசிகள் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.

பாகிஸ்தான் அணி தோல்வி அடைவதற்கு இந்திய வீரர்கள் பின்புலமாக இருந்தது குறித்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஹாட்டாக உரையாடல்களை நிகழ்த்தி வருகிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024