RR vs LSG Preview: பக்கா லைன் அப்பில் ராஜஸ்தான் ராயல்ஸ்! ஒரேயொரு இளம் வீரரை மலைபோல் நம்பியிருக்கும் லக்னோ
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Rr Vs Lsg Preview: பக்கா லைன் அப்பில் ராஜஸ்தான் ராயல்ஸ்! ஒரேயொரு இளம் வீரரை மலைபோல் நம்பியிருக்கும் லக்னோ

RR vs LSG Preview: பக்கா லைன் அப்பில் ராஜஸ்தான் ராயல்ஸ்! ஒரேயொரு இளம் வீரரை மலைபோல் நம்பியிருக்கும் லக்னோ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 24, 2024 07:00 AM IST

பேட்டிங், பவுலிங் என பார்மில் இருக்கும் வீரர்களுடன் பக்காவான அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளது. லக்னோவை பொறுத்தவரை பேட்டிங்கில் இருக்கும் வலிமை, பவுலிங்கில் குறைவாக இருந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் மீது நம்பிக்கை வைத்துள்ளது.

போட்டி தொடங்குவதற்கு முன் செஃல்பி எடுத்துக்கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் (இடது), லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் (வலது)
போட்டி தொடங்குவதற்கு முன் செஃல்பி எடுத்துக்கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் (இடது), லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் (வலது)

2022இல் அறிமுகமான அந்த அணி விளையாடியிருக்கும் இரண்டு சீசன்களிலும் ப்ளே ஆஃப் வரை தகுதி பெற்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் கடந்த முறை 5வது இடத்தை பிடித்து ப்ளே ஆஃப் வாய்ப்பை நழுவவிட்டது. கடைசியாக அந்த அணி 2022 சீசனில் இறுதிப்போட்டி வரை சென்ற ரன்னர் அப் ஆனது.

ராஜஸ்தான் ராயல்ஸ் பலம்

கடந்த சீசனில் உள்ளூர் மைதானத்தில் விளையாடிய 5 போட்டிகளில் 4 தோல்வியை சந்திதுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ். இந்த சூழ்நிலையில் இந்த சீசனின் முதல் போட்டியை உள்ளூர் மைதானத்தில் தொடங்குகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பெரிதாக எந்த மாற்றமும் நிகழவில்லை. கடந்த டிசம்பர் மாதத்தில் நடந்த ஏலத்தில் கூட சொல்லிக்கொள்ளும் அளவில் வீரராகள் ஏலம் எடுக்கவில்லை.

ஆனாலும் தற்போது இருக்கும் அணியில் ஓபனர்களாக பவர்புஃல் ஹிட்டர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், டாப் ஆர்டரில் சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரை வலுப்படுத்தும் விதமாக ஷிமரான் ஹெட்மேயர், ரியான் பிராக், ரோவ்மன் பவல், துருவ் ஜுரல் என வலிமையான பேட்டிங்கில் வரிசையை கொண்டுள்ளது.

பவுலிங்கிலும் ஸ்பின்னர்களாக ரவிச்சந்திரன் அஸ்வின், யஸ்வேந்திர சஹால், வேகப்பந்து வீச்சாளர்களாக ட்ரெண்ட் போல்ட், ஆவேஷ் கான், குல்தீப் சென் என வலுவான கூட்டணி உள்ளது. அணியில் இடம்பிடித்திருக்கும் அனைத்து வீரர்களின் பார்மும் சமீப காலங்களில் நல்ல நிலையிலேயே உள்ளன.

எனவே ஒரு அணியாக வலுவாக இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு பலவீனமான விஷயங்கள் என்பது பெரிதாக இல்லை. வீரர்கள் அனைவரும் தங்களது பணிகளை சிறப்பாக செய்யும் பட்சத்தில் வீழ்த்துவதற்கு கடினமான அணியாகவே உள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் பலம்

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை பொறுத்தவரை பேட்டிங் வரிசை இருக்கும் பலம், பவுலிங்கில் பெரிதாக இல்லை. குவன்டைன் டி காக், தேவ்தத் படிக்கல், தீபக் ஹுடா, கேஎல் ராகுல், நிக்கோலஸ் பூரான், மார்கஸ் ஸ்டோய்னிஸ் என சிறந்த டி20 பேட்ஸ்மேன்களை கொண்டுள்ளது. இவர்களுடன் வளர்ந்து வரும் வீரரான ஆயுஷ் பதோனியும் கடந்த இரு சீசன்களாக அணிக்கு சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறார்.

பவுலிங்கில் ஸ்பின்னர்களாக ரவிபிஷ்னோய், க்ருணால் பாண்ட்யாவும், வேகப்பந்து வீச்சாளர்களாக ஷிவம் மாவி, மோக்சின் கான், நவின் உல் ஹக் ஆகியோர் உள்ளார்கள். பேட்டிங்கை ஒப்பிடுகையில் பவுலிங்கில் அனுபவ வீரர்கள் இல்லாமல் இருப்பது சற்று பின்னடைவான விஷயமாகவே உள்ளது

தாக்கம் ஏற்படுத்துவாரா ஷமர் ஜோசப்

கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தனது அற்புத வேகப்பந்து வீச்சால் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களை நிலைகுலைய செய்து அணிக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை தேடி தந்தார் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷமர் ஜோசப். அவர் லக்னோ அணியில் இடம்பிடித்துள்ளார். அனுபவ வீரராக இல்லாவிட்டாலும் அனலாக பந்து வீசும் இளம் வேகப்பந்து வீச்சாளரான இருந்து வரும் இவர் ஐபிஎல் போட்டியில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

லக்னோ வீரர் மார் வுட் இந்த சீசனில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு பதிலாக ஷமர் ஜோசப்பை லக்னோ தேர்வு செய்தது. எனவே அவர் களமிறங்கும் பட்சத்தில் தாக்கம் ஏற்படுத்துவாரா என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

பிட்ச் நிலவரம்

மற்ற ஐபிஎல் ஆடுகளங்கள் போல் ஜெய்ப்பூர் ஆடுகளமும் ஸ்பின்னுக்கு நன்கு உதவும் விதமாகவே இருக்கும். பனிப்பொலிவுக்கு வாய்ப்பு இல்லை என கூறப்படுவதால் டாஸ் முக்கிய பங்கு வகிக்காது என தெரிகிறது. பேட்ஸ்மேன்கள் காட்டில் மழையாகவும், வேகப்பந்து வீச்சாளர்களை ஸ்பின்னர்களுக்கு கொஞ்சம் உதவும் விதமாகவும் ஆடுகளம் இருக்கும் என கூறப்படுகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ இது வரை

இந்த இரு அணிகளும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ராஜஸ்தான் 2, லக்னோ ஒரு முறை வென்றுள்ளது. இன்றைய போட்டியில் வென்று வெற்றி விகிதத்தை சமன் செய்ய லக்னோ முயற்சிக்கும் என எதிர்பார்க்கலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner
சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.