தமிழ் செய்திகள்  /  Cricket  /  West Indies Stun Australia In Fortress Gabba With Historic Win After 27 Years

AUSvWI: 27ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலியாவை வெற்றிகண்ட வெஸ்ட் இண்டீஸ்

Marimuthu M HT Tamil
Jan 28, 2024 04:28 PM IST

காபாவில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி பல சாதனைகளைப் படைத்தது.

ஷமர் ஜோசப் (வலது புறம் இருப்பவர்) ஜோஷ் ஹஸல்வுட்டின் விக்கெட்டைப் பறித்து வெஸ்ட் இண்டீஸை வெற்றி பெறச் செய்த தருணம்
ஷமர் ஜோசப் (வலது புறம் இருப்பவர்) ஜோஷ் ஹஸல்வுட்டின் விக்கெட்டைப் பறித்து வெஸ்ட் இண்டீஸை வெற்றி பெறச் செய்த தருணம் (AFP)

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த மூன்று ஆண்டுகளில் காபா நகரில் இரண்டாவது முறையாக, ஆஸ்திரேலிய அணி தோற்கிறது. 

காயமடைந்த கால்விரலுடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷமர் ஜோசப், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் 11.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு உதவினார். 

வரலாற்று வெற்றியுடன் மேற்கிந்தியத் தீவுகள்:

 27 ஆண்டுகளுக்கு முன்பு, கடைசியாக 1997ஆம் ஆண்டு, பிரிஸ்பேனில் மேற்கிந்தியத்தீவுகள் அணி, ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. அதன்பின் தற்போது தான் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளது. 

 பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய முதல் அணி என்ற பெருமையை வெஸ்ட் இண்டீஸ் பெற்றுள்ளது. பிங்க் பால் டெஸ்ட் எனப்படும் பகலிரவு டெஸ்ட் போட்டிகளில், ஆஸ்திரேலியாவை வீழ்த்திய முதல் அணி என்ற சாதனையையும் மேற்கிந்தியத் தீவுகள் அணி படைத்தது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 11 பிங்க் பால் டெஸ்ட்களில் பெற்ற தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

காபாவில் நடந்த டெஸ்ட் தொடர் முடிவில் நடந்தது என்ன?

 

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 108 ஓவர்களில், 311 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் 91 ரன்களுடனுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும், கிர்க் மெக்கென்சி 41 ரன்களும்; அலிக் அதானசே 35 ரன்களும் அடித்து ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில், 53 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 289 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது.  உஸ்மான் கவாஜா 75 ரன்கள்ளும் கேரி 65 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின், 22 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 193 ரன்கள் எடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் ஆல்-அவுட் ஆனது. ஆஸ்திரேலிய வீரரான ஹேசில்வுட் மூன்று விக்கெட்டை வீழ்த்தினார்.

அதனைத்தொடர்ந்து 216 ரன்கள் எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 3ஆம் நாள் முடிவில் 60 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்நிலையில் நான்காம் ஆட்டத்தில் 2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன்மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வென்றது. மேலும் 1-1 என டெஸ்ட் தொடரை சமநிலைப்படுத்தியது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 27ஆண்டுகளுக்குப் பின், வென்றுள்ளது.

காயமடைந்த கால்விரலுடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜோசப் ஒரே செஷனில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score stay connected with HT Tamil