Babar Azam: பாபர் கேப்டன்ஷிப்பை கடுமையாக சாடிய பாக்., முன்னாள் கேப்டன்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Babar Azam: பாபர் கேப்டன்ஷிப்பை கடுமையாக சாடிய பாக்., முன்னாள் கேப்டன்

Babar Azam: பாபர் கேப்டன்ஷிப்பை கடுமையாக சாடிய பாக்., முன்னாள் கேப்டன்

Manigandan K T HT Tamil
Oct 26, 2023 10:10 AM IST

2023 உலகக் கோப்பையில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடி மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது.

பாக்., கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் அசாம்
பாக்., கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் அசாம் (AP)

இந்த வார தொடக்கத்தில் 2023 உலகக் கோப்பையில், சென்னையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தான் ஒரு மோசமான தோல்வியை எதிர்கொண்டது.

எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஆப்கானிஸ்தானுக்கு 283 ரன்கள் இலக்கை நிர்ணயித்த போதிலும், ரஹ்மானுல்லா குர்பாஸ் (65) வலுவான தொடக்கத்தை வழங்கியதால், அவரது ஜோடி இப்ராஹிம் சத்ரான் (87) இன்னிங்ஸை அதிரடி பாதைக்கு அழைத்துச் சென்றதால், பாகிஸ்தான் தோல்வியைத் தழுவ வேண்டியதாகிப் போனது.

அதிர்ச்சித் தோல்விக்குப் பிறகு முன்னாள் வீரர்கள் கேப்டன் பாபர் அசாம் மற்றும் பிற வீரர்களை போட்டியில் மோசமான செயல்பாட்டிற்காக வசைபாடி வருகின்றனர். வாசிம் அக்ரம், மிஸ்பா உல் ஹக், ரமிஸ் ராஜா, ரஷித் லத்தீப், முஹம்மது ஹபீஸ், ஆகிப் ஜாவேத், ஷோயப் மாலிக், மொயின் கான் அல்லது ஷோயப் அக்தர், இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வியடைந்ததற்கு பாபர்தான் காரணம் என சாடினர்.

பாபரின் கேப்டன்சியை சமீபத்தில் விமர்சித்தவர் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி. அவர் ஒரு தலைவராக தனது அணியை ஊக்குவிக்க முடியாது என்று நம்புகிறேன் என்றார்.

பாபரின் ஆன்-பீல்டு நடத்தை மற்றும் அவரது கேப்டன்சி முடிவுகளைக் குறிப்பிட்டு அவற்றில் குறை இருப்பதாக அப்ரிடி கூறினார்.

"போராடத் தெரிந்தால்தான் அற்புதங்கள் நடக்கும். கேப்டன் தான் எல்லாம். அவர் பீல்டிங்கில் முயற்சிகளை மேற்கொண்டால், நிறைய டைவ் செய்தால், அங்குமிங்கும் ஓடி அவரது அணி வீரர்களை ஆதரித்தால், அணி உற்சாகமடைந்து கூடுதல் முயற்சிகளை மேற்கொள்கிறது. ஏனென்றால், கேப்டன் இவ்வளவு முயற்சிகளை மேற்கொள்கிறார் என்றால், சக வீரர்களும் அதே அளவுக்கு முயற்சிகளை மேற்கொள்வார்கள்” என்று அஃப்ரிடி சாமா டிவியில் கூறினார்.

“நான் கேப்டனாக இருந்தேன், அதே போல் முகமது யூசுப்பும் இருந்தார். கேப்டன் அதிகம் ஈடுபாடு காட்டவில்லை என்றால், யாருக்கும் ஊக்கம் கிடைக்காது. அழுத்தம் கொடுப்பது கேப்டனின் கடமை. உலகக் கோப்பை தொடரில் அற்புதங்கள் நிகழும் என காத்திருக்கிறோம்” என்று அப்ரிடி மேலும் கூறினார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.