David Warner: சிட்னி மைதானத்தில் கெத்தாக ஹெலிஹாப்டரில் வந்து இறங்கிய வார்னர்! ஏன் தெரியுமா?
David Warner made a legendary entrance, landing in the middle of SCG from a chopper.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியில் முக்கிய வீரராக இருந்து வந்தவர் டேவிட் வார்னர். அதிரடி ஓபனிங் பேட்ஸ்மேனாகவும், மிரட்டலான பீல்டராகவும் டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று வகை போட்டிகளிலும் அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான உள்ளூர் டெஸ்ட் தொடருடன் ஓய்வை அறிவித்தார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற போதிலும் தொடர்ந்து பிரான்சைஸ் கிரிக்கெட் விளையாடுவேன் என தெரிவித்திருந்தார்.
அதன்படி ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வரும் பிபிஎல் என்று அழைக்கப்படும் பிக் பேஷ் லீக் 2023-24 சீசனில் சிட்னி தண்டர்ஸ் அணிக்காக விளையாடுகிறார் வார்னர். இதையடுத்து உலக புகழ் பெற்றி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்த சிட்னி தண்டர்ஸ் - சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் மோதும் போட்டியில் பங்கேற்பதற்காக மைதானத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கி கெத்தாக என்ட்ரி கொடுத்துள்ளார்.
