Kuldeep Yadav: 24வது ஓவரில் என்ன நடந்தது?-குல்தீப் யாதவிடம் கேப்டன் ரோகித் கூறியது என்ன?
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Kuldeep Yadav: 24வது ஓவரில் என்ன நடந்தது?-குல்தீப் யாதவிடம் கேப்டன் ரோகித் கூறியது என்ன?

Kuldeep Yadav: 24வது ஓவரில் என்ன நடந்தது?-குல்தீப் யாதவிடம் கேப்டன் ரோகித் கூறியது என்ன?

Manigandan K T HT Tamil
Oct 30, 2023 10:12 AM IST

ரோகித் சர்மா குல்தீப் யாதவிடம் 24 வது ஓவரின் போது தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பவுலர் குல்தீப் யாதவ்
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பவுலர் குல்தீப் யாதவ் (Hotstar)

நேற்றைய ஆட்டத்தில் குறைந்த அளவு ஸ்கோரையே இந்தியா பதிவு செய்தாலும் இங்கிலாந்து அணியால் அந்த ஸ்கோரை சேஸ் செய்ய முடியவில்லை.

ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை உலகக் கோப்பையில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தனர். இந்த வெற்றியின் மூலம், இந்தப் போட்டியில் இந்தியா தொடர்ந்து 6-வது வெற்றியைப் பதிவு செய்தது. கேப்டன் ரோகி சர்மா 101 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து ஒரு முக்கிய பங்கை வகித்தார், அவரே ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பல இந்திய பேட்டர்கள் செயல்பட சிரமப்பட்ட ஒரு சவாலான ஆடுகளத்தில் தனித்து நின்றார் கேப்டன் ரோகித். டெத் ஓவர்களில் சூர்யகுமார் யாதவ் முக்கியமான 49 ரன்களுடன் பங்களிக்க, இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 229 ரன்களை எட்ட உதவியது. ஆனால் இங்கிலாந்து அணி 34.5 ஓவரில் 129 ரன்களுக்கு சுருண்டது.

பந்து வீச்சில் ஷமி 22 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுக்களையும், பும்ரா 32 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்தத் தோல்வி மூலம், இங்கிலாந்து விளையாடிய 6 ஆட்டங்களில் அவர்களின் ஐந்தாவது தோல்வியைக் குறித்தது. இதற்கு நேர்மாறாக, போட்டியில் தோல்வியடையாத ஒரே அணியாக இந்தியா உள்ளது மற்றும் அரையிறுதி இடத்தையும் ஏறக்குறைய உறுதி செய்துவிட்டது.

சுழற்பந்து வீச்சுடன், குல்தீப் யாதவ் இந்தியாவிற்கு முக்கியப் பங்களித்தார்.  அவரது சுழலில் 16வது ஓவரின் போது இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லரின் விக்கெட் சிக்கியது. இடது கை சுழற்பந்து வீச்சாளர் லியாம் லிவிங்ஸ்டோனை 27 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தபோது இன்னிங்ஸில் மற்றொரு விக்கெட்டை எடுத்தார் குல்தீப் யாதவ். 

24வது ஓவரில் என்ன நடந்தது?

குல்தீப் 22வது ஓவரை வீசினார், அந்த ஓவரின் ஒரு பந்து வீச்சில், லிவிங்ஸ்டோன் கால் பேடில் பந்து பட்டது. ஆனால், இந்திய அணி அந்த நேரத்தில் சாத்தியமான LBW க்காக ரிவ்யூ செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தது; இருப்பினும், பெரிய திரையில் அந்த பந்து லெக்-ஸ்டம்பைத் தாக்கியிருக்கும் என்பதை உணர்த்தியது.

அதைத் தொடர்ந்து, 24வது ஓவரின்போது குல்தீப்பை நோக்கிச் சென்ற ரோகித், ரிவியூக்கு பொறுப்பேற்காததற்காக தனது கோபத்தை வெளிப்படுத்தினார். குல்தீப் அமைதியாக இருந்தார்.

எவ்வாறாயினும், தவறவிட்ட வாய்ப்பை இந்தியா இழக்கவில்லை, குல்தீப் லிவிங்ஸ்டோனை 30வது ஓவரில் ஆட்டமிழக்கச் செய்தார், இது உலகக் கோப்பையில் அணியின் ஆறாவது தொடர்ச்சியான வெற்றிக்கு வழி வகுத்தது.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.