David Warner: "ஒரு நாள் போட்டியிலும் ஓய்வு பெறுகிறேன்! ஆனால்..!" - சர்ப்ரைஸ் தகவலை பகிர்ந்த வார்னர்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  David Warner: "ஒரு நாள் போட்டியிலும் ஓய்வு பெறுகிறேன்! ஆனால்..!" - சர்ப்ரைஸ் தகவலை பகிர்ந்த வார்னர்

David Warner: "ஒரு நாள் போட்டியிலும் ஓய்வு பெறுகிறேன்! ஆனால்..!" - சர்ப்ரைஸ் தகவலை பகிர்ந்த வார்னர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 01, 2024 09:15 AM IST

டெஸ்ட் கிரிக்கெட்டுடன், ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலியாவின் ஓபனிங் பேட்ஸ்மேன் டேவிட் வார்னர். ஆனால் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தேவைப்பட்டால் விளையாடவும் தயார் எனவும் கூறியுள்ளார்.

உலகக் கோப்பை 2023 இறுதிப்போட்டி வெற்றிக்கு பின் டேவிட் வார்னர்
உலகக் கோப்பை 2023 இறுதிப்போட்டி வெற்றிக்கு பின் டேவிட் வார்னர் (PTI)

சிட்னியில் நடைபெற இருக்கும் டெஸ்ட் போட்டி தான் வார்னர் விளையாட இருக்கும் கடைசி சர்வதேச டெஸ்ட் போட்டியாக அமைகிறது. இதையடுத்து ஒரு நாள் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக ரசிகர்களுக்கு ஷாக் தகவலை வார்னர் பகிர்ந்துள்ளார்.

இருப்பினும் ஓய்வு குறித்து மற்றொரு சர்ப்ரைசான விஷயத்தையும் தெரிவித்துள்ளார். ஒரு நாள் போட்டியில் ஓய்வு பெற்றாலும், 2025ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தேவைப்பட்டால் தன்னை அணியில் தேர்வு செய்யலாம் எனவும், அந்த தொடரில் விளையாட தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஓய்வு குறித்தும், கிரிக்கெட்டில் சாதித்தது குறித்தும் வார்னர் கூறியதாவது: "டெஸ்ட் மட்டுமல்ல, ஒரு நாள் கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுகிறேன். இந்தியாவில் வைத்து உலகக் கோப்பை வென்றதை மிகப் பெரிய சாதனையாக கருதுகிறேன்.

ஓய்வு முடிவினால் பிற நாடுகளில் நடைபெறும் லீக் தொடர்களில் விளையாடுவதில் எந்த சிக்கலும் இருக்காது. சாம்பியன்ஸ் டிராபி தொடரும் வர இருக்கிறது. இன்னும் இரண்டு ஆண்டுகள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடினால், சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் என்னை தேர்வு செய்யலாம்" என்றார்.

ஒரு நாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவில் டாப் ரன்கள் அடித்த பேட்ஸ்மேன்களில் டேவிட் வார்னர் ஆறாவது இடத்தில் உள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 6932 ரன்கள், 45.30 சராசரியுடன் அடித்திருக்கும் வார்னர், 22 சதங்களை எடுத்துள்ளார். ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் 29 சதங்களுக்கு அடுத்தபடியாக, ஒரு நாள் போட்டியில் அதிக சதமடித்த ஆஸ்திரேலியர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார் வார்னர்.

ஆஸ்திரேயா அணி 2015இல் சொந்த மண்ணிலும், 2023இல் இந்தியாவிலும் வைத்து உலகக் கோப்பை தொடரை வென்றபோது, அந்த அணியில் இடம்பிடித்திருந்தார் டேவிட் வார்னர். டேவிட் வார்னரின் கடைசி ஒரு நாள் போட்டி, உலகக் கோப்பை 2023 தொடரில் இந்தியாவுக்கு எதிராக அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டி அமைந்துள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.