தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Usa T20 World Cup Team: யுஎஸ்ஏ டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்த நியூசிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர்!

USA T20 World Cup Team: யுஎஸ்ஏ டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்த நியூசிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர்!

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 04, 2024 09:32 AM IST

நியூசிலாந்து அணியில் ஆல்ரவுண்டராக ஜொலித்து பல்வேறு முக்கிய வெற்றிகளை பெற்று தந்தவர் கோரி ஆண்டர்சன். ஐபிஎல் போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். தற்போது யுஎஸ்கே அணி வீரராக எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் களமிறங்குகிறார்

யுஎஸ்ஏ அணிக்காக களமிறங்கும் கோரி ஆண்டர்சன்
யுஎஸ்ஏ அணிக்காக களமிறங்கும் கோரி ஆண்டர்சன்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. இதையடுத்து தொடரை நடத்தும் யுஎஸ்ஏ அணியும் களமிறங்குகிறது.

யுஎஸ்ஏ அணியில் கோரி ஆண்டர்சன்

டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு நாடும் தங்களது அணிகளை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் யுஎஸ்ஏ 15 பேர் கொண்ட  அணியை அறிவித்துள்ளது.

யுஎஸ்ஏ அணியில் நியூசிலாந்து நாட்டின் முன்னாள் ஆல்ரவுண்டரான கோரி ஆண்டர்சன் இடம்பிடித்துள்ளார். இதன் மூலம் இரண்டு நாடுகளுக்காக டி20 உலகக் கோப்பை தொடரில் களமிறங்கும் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட், ஒரு நாள், டி20 ஆகிய போட்டிகளில் விளையாடியவர் கோரி ஆண்டர்சன். நியூசிலாந்து அணிக்காக 2012இல் முதல் முறையாக டி20 போட்டிகளில் இவர் அறிமுகமானார். இதன் பின்னர் 2013இல் டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் அறிமுகமானார்.

கடைசியாக நியூசிலாந்து அணிக்காக 2016இல் டெஸ்ட் போட்டிகளிலும், 2017இல் ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடினார்.

தற்போது யுஎஸ்ஏ அணிக்காக விளையாடி வரும் கோரி ஆண்டர்சன் டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்துள்ளார்.

கடந்த மாதம் யுஎஸ்ஏ அணிக்காக களமிறங்கிய ஆண்டர்சன் முதல் போட்டியில் கனடா அணிக்கு எதிராக விளையாடினார். இந்த போட்டியில் யுஎஸ்ஏ அணி வெற்றி பெற்றது.

இடது கை பேட்ஸ்மேனாகவும், இடது கை வேகப்பந்து வீச்சாளராகவும் இருந்து வருபவர் கோரி ஆண்டர்சன். அதிரடியாக பேட் செய்யக்கூடிய இவர், ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்தும் விதமாகவும் பவுலிங் செய்யக்கூடியவராக உள்ளார். ஒரு நாள், டெஸ்ட் போட்டிகளில் சதமடித்திருக்கும் ஆண்டர்சன், ஒரு நாள் போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராக இருந்துள்ளார். 

ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். தனது அனுபவ ஆட்டத்தை யுஎஸ்ஏ அணிக்காகவும் டி20 உலகக் கோப்பையில் இவர் வெளிப்படுத்துவார் என எதர்பார்க்கப்படுகிறது.

டி20 உலகக் கோப்பையில் யுஎஸ்ஏ அணி

டி20 உலகக் கோப்பையில் மொத்தம் நான்கு குரூப்கள் இடம்பிடித்துள்ளன. ஒவ்வொரு குரூப்களிலும் 5 அணிகள் இடம்பிடித்துள்ளன. இதில் யுஎஸ்ஏ அணி குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ளது.

இந்த பிரிவில் இந்தியா, பாகிஸ்தான். அயர்லாந்து, யுஎஸ்ஏ, கனடா ஆகிய அணிகள் உள்ளன. யுஎஸ்ஏ அணி தனது முதல் போட்டியில் கனடா அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டிதான் டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் முதல் போட்டியாக உள்ளது.

இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

 

 

IPL_Entry_Point