U19 World Cup: சீனியர்களை போல் ஜூனியர்களும் சரண்டர்! இந்தியா யு19 தோல்வி - நான்காவது முறை சாம்பியன் ஆன ஆஸ்திரேலியா யு19
2023 உலகக் கோப்பை தொடரில் இந்தியா சீனியர் அணிக்கு நடந்த சோகம், தற்போது இந்திய யு19 அணிக்கும் நிகழ்ந்துள்ளது. இந்த இரு சம்பவங்களையும் ஆஸ்திரேலியா சீனியர், ஆஸ்திரேலியா யு19 அணியினர் செய்துள்ளனர்.
யு19 உலகக் கோப்பை தொடர் தென் ஆப்பரிக்காவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்ற இந்த தொடர், கடந்த மாதம் 19ஆம் தேதி தொடங்கிய நிலையில், இறுதிப்போட்டியில் இந்தியா யு19 - ஆஸ்திரேலியா யு19 அணிகள் இன்று மோதின.
பொனோனி நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்தது. இதையடுத்து சேஸிங்கில் களமிறங்கிய இந்தியா 43.5 ஓவரில் 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதைத்தொடர்ந்து 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா யு19 அணி நான்காவது முறையாக யு19 உலக கோப்பை வென்று சாதனை புரிந்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதத்தில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது இந்தியா. தற்போது மீண்டும் அதே சம்பவம் சுமார் மூன்று மாதங்களில் யு19 உலகக் கோப்பை தொடரிலும் நிகழ்ந்துள்ளது.
நடப்பு சாம்பியனாக இருந்து வரும் இந்தியா யு19 இதுவரை 5 முறை யு19 உலகக் கோப்பை வென்றிருப்பதோடு, அதிக முறை சாம்பியன் ஆகியிருக்கும் அணி என சாதனையை தன் வசம் வைத்துள்ளது. ஏழாவது உலகக் கோப்பையை இந்த முறை இந்தியா யு19 அணி கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோப்பை கை நழுவியுள்ளது.
இந்த தொடரில் தோல்வியை சந்திக்காத அணியாக இருந்து வந்த இந்தியா யு19 அணி, இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா யு19 அணியிடம் சரணடைந்துள்ளது. இதேபோல் 2023 உலகக் கோப்பை தொடரிலும் லீக் போட்டிகள் அனைத்திலும் வென்ற ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்தியா அணி, இறுதிப்போட்டியில் வெற்றியை கோட்டைவிட்டது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்