Tim Southee: டி20 கிரிக்கெட்டில் எந்த வீரரும் நிகழ்த்திடாத சாதனை! வரலாறு படைத்த நியூசிலாந்து பவுலர் டிம் செளத்தி
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் செளத்தி. டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக இந்த சாதனையை நிகழ்த்திய வீரராகவும் உள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளை தொடர்ந்து நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்திருக்கும் பாகிஸ்தான் அணி போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
இதையடுத்து நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் டி20 போட்டி ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து 46 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய டிம் செளத்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அத்துடன் டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற வரலாற்று சாதனையும் புரிந்தார்.
2008ஆம் ஆண்டில் முதல் முறையாக டி20 போட்டிகளில் அறிமுகமானார் டிம் செளத்தி. சுமார் 16 ஆண்டு காலத்தில் இதுவரை 118 சர்வதேச
டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் அவர் 151 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவரது சரசாரி 22.96 எனவும், எகானமி 8.11 எனவும் உள்ளது. இரண்டு முறை 5 விக்கெட்டுகளை கைபற்றியுள்ளார். அதேபோல் ஹாட்ரிக் விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.
டிம் செளத்திக்கு அடுத்தபடியாக 140 விக்கெட்டுகளுடன் வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசான் இருக்கிறார். டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளுக்கும் மேல் வீழ்த்திய பவுலர்கள் லிஸ்டில் இஷ் சோதி (127 விக்கெட்டுகள்), மிட்செல் சாண்ட்னர் (105) ஆகியோர் அடுத்தடுத்த இடத்தில் உள்ளார்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்