தமிழ் செய்திகள்  /  Cricket  /  Three Left Handers De Kock, Pooran, Krunal Innings Helps Lucknow To Post 199 Runs Against Punjab

LSG vs PBKS Live Score: மூன்று இடது கை பேட்ஸ்மேன்கள் ருத்ரதாண்டவம்! பஞ்சாப்புக்கு எதிராக லக்னோ ரன்குவிப்பு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 30, 2024 09:29 PM IST

இடது கை பேட்ஸ்மேன்களான டி காக், பூரான், க்ருணால் பாண்ட்யா ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் லக்னோ அணி 199 ரன்களை குவித்துள்ளது. சேஸ் செய்ய கடினமாக இருக்கும் இந்த பிட்சில் பஞ்சாப் கிங்ஸுக்கு சவலான இலக்காக அமைந்துள்ளது.

பந்தை சிக்ஸருக்கு விரட்டும் லக்னோ கேப்டன் பூரான்
பந்தை சிக்ஸருக்கு விரட்டும் லக்னோ கேப்டன் பூரான் (AFP)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த போட்டியில் லக்னோ அணிக்கு நிக்கோலஸ் பூரான் கேப்டனாக செயல்படுகிறார். கேஎல் ராகுல் இம்பேக்ட் வீரராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் காயத்தில் இருந்து குணமடைந்து கேஎல் ராகுல் வந்திருப்பதால், அவரது பணியை எளிதாக்க இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டிருப்பாத நிக்கோலஸ் பூரான் தெரிவித்தார். லக்னோ அணியில் யஷ் தாக்கூருக்கு பதிலாக சித்தார்த் சேர்க்கப்பட்டுள்ளார். பஞ்சாப் அணியில் எந்த மாற்றமும் இல்லாமல் விளையாடுகிறது.

லக்னோ பேட்டிங்

டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் நிக்கோலஸ் பூரான் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்துள்ளது.

அதிகபட்சமாக குவன்டைன் டி காக் 54, க்ருணால் பாண்ட்யா 43, நிக்கோலஸ் பூரான் 42 ரன்கள் எடுத்துள்ளனர்.

பஞ்சாப் பவுலர்களில் சாம் கரன் 3, அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ககிசோ ரபாடா, ராகுல் சஹார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

டி காக் அரைசதம்

லக்னோ அணிக்கு தொடக்கம் பெரிதாக அமையவில்லை. பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்துவதற்காக கேப்டன்சியை நிக்கேலாஸ் பூரானிடம் ஒப்படைத்துவிட்டு களமிறங்கிய கேஎல் ராகுல் 15 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.

அவரை தொடர்ந்து பேட் செய்த தேவ்தத் படிக்கலும் 9 ரன்னில் நடையை கட்டினார். இதனால் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது லக்னோ.

ஆனால் ஓபனிங் பேட்ஸ்மேனாக பேட் செய்ய வந்து சீரான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்து டி காக். பவுண்டரி, சிக்ஸர் என அதிரடி காட்டிய அவர் அரைசதத்தை பூர்த்தி செய்தார். 38 பந்துகளில் 54 ரன்கள் அடித்த டி காக் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

பூரான் அதிரடி

நான்காவது பேட்ஸ்மேனாக பேட் செய்ய வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் இரண்டு சிக்ஸர்களை அடித்தபோதிலும் 19 ரன்கள் எடுத்து வெளியேறினார். இவருக்கு அடுத்தபடியாக களமிறங்கிய அணி கேப்டன் நிக்கோலஸ் பூரான் தொடக்கம் முதல் அதிரடி காட்டினார். பவுண்டரி, சிக்ஸர்கள் அடுத்தடுத்து அடித்து விரைவாக ரன்குவிப்பில் ஈடுபட்டார்.

21 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ரபாடா பந்திலே போல்டாகி வெளியேறினார். அவர் தனது இன்னிங்ஸில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளை அடித்தார்.

க்ருணால் பாண்ட்யா பினிஷ்

இளம் பேட்ஸ்மேனான ஆயுஷ் பதோனி 8 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். ஆனால் கடைசி கட்டத்தில் பஞ்சாப் பவுலர்களை அடித்து துவைத்த க்ருணால் பாண்ட்யா அணிக்கு தேவைப்படும் பினிஷிங்கை கொடுத்தார். பாண்ட்யா 22 பந்துகளில் 43 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார். தனது இன்னிங்ஸில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களை அடித்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள். 

IPL_Entry_Point