1952ஆம் ஆண்டுக்குப் பின் இப்ப தான்.. ஒரே நாளில் 17 விக்கெட்டுகள் வீழ்ந்தன.. இந்திய ஆஸ்திரேலிய டெஸ்டில் திருப்பம்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  1952ஆம் ஆண்டுக்குப் பின் இப்ப தான்.. ஒரே நாளில் 17 விக்கெட்டுகள் வீழ்ந்தன.. இந்திய ஆஸ்திரேலிய டெஸ்டில் திருப்பம்

1952ஆம் ஆண்டுக்குப் பின் இப்ப தான்.. ஒரே நாளில் 17 விக்கெட்டுகள் வீழ்ந்தன.. இந்திய ஆஸ்திரேலிய டெஸ்டில் திருப்பம்

Marimuthu M HT Tamil
Nov 23, 2024 12:03 AM IST

1952ஆம் ஆண்டுக்குப் பின் இப்ப தான்.. ஒரே நாளில் 17 விக்கெட்டுகள் வீழ்ந்தன.. இந்திய ஆஸ்திரேலிய டெஸ்டில் திருப்பம் கிடைத்துள்ளது.

1952ஆம் ஆண்டுக்குப் பின் இப்ப தான்.. ஒரே நாளில் 17 விக்கெட்டுகள் வீழ்ந்தன.. இந்திய ஆஸ்திரேலிய டெஸ்டில் திருப்பம்
1952ஆம் ஆண்டுக்குப் பின் இப்ப தான்.. ஒரே நாளில் 17 விக்கெட்டுகள் வீழ்ந்தன.. இந்திய ஆஸ்திரேலிய டெஸ்டில் திருப்பம் (AFP)

பெர்த் நகரில் ஆப்டஸ் மைதானத்தில் முதல் நாளில் மட்டும் மொத்தம் 17 விக்கெட்டுகள் வீழ்ந்தன. இது 1952ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் எந்தவொரு டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலும் நடக்காத விக்கெட் சரிவு இதுவாகும்.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவை அவுட்டாக்கிய பிறகு, முதல்நாளில் ஆட்ட நேர முடிவதற்குள் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.

ஐந்து நாட்கள் நடக்கும் பெர்த் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பும்ரா பேட்டிங்கினை தேர்வு செய்தார்.

முதல் இன்னிங்ஸில் இந்தியா:

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தவித்தனர். அதன்பின் நீண்டநேரம் பிழைத்து ஆடமுடியாமல் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

முதல் இன்னிங்ஸில் இந்தியா 150 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக அறிமுக வீரர் நிதீஷ் ரெட்டி, ரிஷப் பந்த் ஆகியோர் ரன்கள் எடுத்தனர்.

அதன்படி இந்திய வீரர்களான கே.எல் ராகுல் 26 ரன்களும், ரிஷப் பந்த் 37 ரன்களும், நிதீஷ் குமார் ரெட்டி 41 ரன்களும் என சொல்லிக்கொள்ளும்படி ரன்கள் எடுத்தனர். மீதி இருக்கும் இந்திய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஆஸ்திரேலிய வீரர் ஜாஸ் ஹெஸல்வுட் 4 விக்கெட்டுகளையும், பட் கம்மின்ஸ் இரண்டு விக்கெட்டுகளையும் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் மிட்செல் மார்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பந்துவீச்சுக்கு சாதகமான நிலைமைகள் மற்றும் இரண்டு நாட்டு வேகப்பந்து வீச்சாளர்களின் செயல்திறன் ஆகியவற்றின் கலவையானது இரு அணிகளின் பேட்ஸ்மேன்களுக்கும் பெர்த் நகரில் பெருமளவில் போராட்டத்தையே தந்தது.

வரலாற்றில் முதல் நாள் டெஸ்ட் போட்டிகள்:

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் 23 விக்கெட்டுகளை வீழ்ந்தன. 2024ஆம் ஆண்டில் இந்தியா முதல் நாளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியது இரண்டாவது முறையாகும். தென்னாப்பிரிக்க அணி 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதைத் தொடர்ந்து இந்தியா 153 ரன்களுக்கு சுருண்டது. 1902-ம் ஆண்டுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்தியாவுக்கு அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனை இதுவாகும்.

1902ஆம் ஆண்டில் எம்.சி.ஜி.யில் நடந்த ஆஷஸ் பாக்ஸிங் டே டெஸ்டின் முதல் நாளில் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் இணைந்து 25 விக்கெட்டுகளை வீழ்த்தியதால், எந்தவொரு டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலும் அதிக விக்கெட்டுகளுக்கான அடையாளமாக இது இருந்தது.

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா:

முதல் இன்னிங்ஸில் அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் அலெக்ஸ் கரே கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 19 ரன்களும், டிராவில் ஹெட் 11 ரன்களும், நாதன் மெக்ஸ்வினி 10 ரன்களும் எடுத்திருந்தனர். முடிவாக முதல் நாள் ஆட்ட நேரமுடிவில் ஆஸ்திரேலிய அணி 27 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்தனர். இந்தியாவினை விட ஆஸ்திரேலிய அணி 83 ரன்கள் பின் தங்கி இருக்கிறது. இந்திய அணியின் சார்பில், கேப்டன் ஜஸ்பிரிட் பும்ரா நான்கு விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் இரண்டு விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ராணா ஒரு விக்கெட்டினையும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.