HBD VVS Laxman: மறக்க முடியுமா ஈடன் கார்டனில் ஆஸி.,யை கதர வைத்த விவிஎஸ் லக்ஷ்மனை! இந்திய அணியின் 4வது இன்னிங்ஸ் ஹீரோ
எந்த போட்டிகளிலெல்லாம் சச்சின், டிராவிட், கங்குலி, சேவாக் ஆகியோர் பேட்டிங்கில் ஜொலிக்க தவறியிருந்தால், நான் இருக்கிறேன் என அணியினரையும், ரசிகர்கர்களையும் ஆசுவாசப்படுத்தி தரமான இன்னிங்ஸை வெளிப்படுத்தி காப்பாளனாக இருந்துள்ளார் விவிஎஸ் லக்ஷ்மன்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விவிஎஸ் லக்ஷ்மன் இந்திய அணிக்காக டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், ஸ்ட்ரோக் பேட்ஸ்மேனாக இருந்து வந்த இவர் இந்திய அணி பல போட்டிகளில் தோல்வியிலிருந்து மீட்ட காப்பாளனாக இருந்துள்ளார்.
தற்போது இந்திய தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராகவும், இந்தியா யு19 கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் உள்ளார். இந்திய அணிக்காக 1996 முதல் 2012 வரை 16 ஆண்டுகள் விளையாடிய போதிலும் ஒரு முறை கூட இவர் உலகக் கோப்பை தொடரில் தேர்வானது கிடையாது. அதிரடியாக பேட் செய்யாமலும், விக்கெட்டுகளுக்கு இடையே ஸ்லோ ரன்னராக இருப்பது லக்ஷ்மன் மீதான குறையாகவே அவர் கிரிக்கெட் கேரியர் முழுவதும் பின் தொடர்ந்தது. ஆனால் தனது ஸ்டோர்க் பிளே ஆட்டத்தையே பலமாக மாற்றி ஏராளமான சிறந்த இன்னிங்ஸ் மூலம் கவனம் பெற்றவராக உள்ளார்.
இந்திய துணை கண்டன், அயல்நாட்டு தொடர் என இவர் செல்லும் இடம்மெல்லாம் தனது பெயரை உச்சரிக்கும் விதமான இன்னிங்ஸை வெளிப்படுத்தும் வீரராக இருந்துள்ளார். குறிப்பாக ஆஸ்திரேலியா, தென் ஆப்பரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் போன்ற பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கும் விதமாகவும், வேகப்பந்து வீச்சாளர்கள் ஜொலிக்கும் விதமாகவும் இருந்து ஆடுகளங்களில் அசால்டாக சதம், அரைசதம் என விளாசி தெறிக்கவிட்டுள்ளார்.
உலகமே ஆஸ்திரேலியா அணியை பார்த்து பயப்படும் விதமாக ஆதிக்கம் செலுத்திய நேரத்தில், அந்த அணி வீரர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தும் ஒரே பேட்ஸ்மேனாக திகழ்ந்தார் லக்ஷ்மன். 2001 இந்திய சுற்றுப்பயணத்தில் ஈடன் கார்டன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக போட்டியை கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத போட்டியாக மாற்றியவர் லக்ஷ்மன்.
ராகுல் டிராவிட்டுடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்த லக்ஷ்மன், கவாஸ்கருக்கு அடுத்தபடியாக இரட்டை சதமடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை புரிந்தார். அந்த போட்டியில் ஒரு நாள் முழுவதும் பேட் செய்த லக்ஷ்மன் - டிராவிட் ஜோடி அவுட்டே ஆகாமல் ஆஸ்திரேலியா பவுலர்களை திணறடித்தனர்.
அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே இரண்டாவது இன்னிங்ஸில் அரை சதமடித்தார் லக்ஷ்மன். இதே அந்நிய மண் முதல் தொடரில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக முதல் போட்டியில் அரை சதத்தை பதிவு செய்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எப்படியோ, அதேபோல் ஒரு நாள் கிரிக்கெட்டில் அந்த அணிக்கு எமனாகவே திகழ்ந்தார் லக்ஷ்மன். அவர் அடித்திருக்கும் 17 டெஸ்ட் சதங்களில் 6, ஒரு நாள் போட்டிகளில் அடித்த 6 சதங்களில் 4 ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அடித்துள்ளார்.
பத்மஸ்ரீ, அர்ஜுனா விருது, விஸ்டன் சிறந்த கிரிக்கெட் வீரர் 2002 போன்ற விருதுகளை வைத்திருக்கும் லக்ஷ்மன், ஒரே தொடரில் 3 சதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையும் வைத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் 90s இறுதியிலும், இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலும் தவிர்க்க முடியாத பேட்ஸ்மேனாக ஜொலித்த விவிஎஸ் லக்ஷ்மனுக்கு இன்று பிறந்தநாள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்