HT Cricket Special: பவுலிங்கில் தனித்துவ சாதனை படைத்தவர்!ஸ்பின் ஆல்ரவுண்டர் கேமியோ ஆட்டம் மூலம் கவனம் ஈரத்த சுனில் ஜோஷி
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ht Cricket Special: பவுலிங்கில் தனித்துவ சாதனை படைத்தவர்!ஸ்பின் ஆல்ரவுண்டர் கேமியோ ஆட்டம் மூலம் கவனம் ஈரத்த சுனில் ஜோஷி

HT Cricket Special: பவுலிங்கில் தனித்துவ சாதனை படைத்தவர்!ஸ்பின் ஆல்ரவுண்டர் கேமியோ ஆட்டம் மூலம் கவனம் ஈரத்த சுனில் ஜோஷி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 06, 2024 05:21 PM IST

10–6–6–5 என்ற சுனில் ஜோஷியின் பவுலிங் எண்ணிக்கை இந்திய கிரிக்கெட் மட்டுமல்ல, உலக கிரிக்கெட்டிலும் தனித்துவ சாதனையாகவே இன்று வரையிலும் இருந்து வருகிறது. ஸ்பின் ஆல்ரவுண்டர் ஆக சில கேமியோ ஆட்டம் மூலம் இந்திய அணிக்கு திருப்புமுனை தந்து கவனம் ஈரத்தவராக இருந்துள்ளார்.

இந்தியாவுக்காக சில கேமியோ ஆட்டம் மூலம் கவனம் ஈரத்த சுனில் ஜோஷி
இந்தியாவுக்காக சில கேமியோ ஆட்டம் மூலம் கவனம் ஈரத்த சுனில் ஜோஷி

ரஞ்சி கிரிக்கெட்டில் சாதனை

கார்நாடகா மாநிலத்தில் உள்ள கடாக் என்ற ஊரில் வசித்து வந்த சுனில் ஜோஷி, கிரிக்கெட் பயிற்சிக்காக நாள்தோறும் சுமார் 60 கிலோ மீட்டருக்கு மேல் இருக்கும் ஹுப்பளி நகருக்கு சென்று வந்துள்ளார். கர்நாடக ரஞ்சி அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்ற அவர், தனித்துவமான சாதனையும் புரிந்துள்ளார். 1995-96 சீசனில் 500 ரன்கள், 50 விக்கெட்டுகள் வீழ்த்தி கவனத்தை ஈரக்கும் வீரராக திகழ்ந்தார். இதன் மூலம் இந்திய அணியிலும் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

டெஸ்ட், ஒரு நாள் வாய்ப்பு

முதன் முதலில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறக்கப்பட்டார் சுனில் ஜோஷி. துர்தஷ்டவசமாக கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒரு பந்து கூட அவரால் வீச முடியாமல் போனது.

இதன் பிறகு அடுத்த சில மாதங்களில் ஒரு நாள் போட்டியில் அறிமுகமானார். அணியில் பிரதான ஸ்பின் பவுலராக அனில் கும்ப்ளே இருக்க, இரண்டாவது ஸ்பின் பவுலராக பங்களிப்பை வெளிப்படுத்தினார்.

அணியில் நிலையான இடம் பெற்ற போதிலும், 1999 உலகக் கோப்பைக்கான அணியில் விளையாடும் வாய்ப்பை பெறவில்லை. அதன் பின்னர் தென் ஆப்பரிக்காவில் நடைபெற்ற எல்ஜி கோப்பை தொடரில் தனது ஒட்டு மொத்த திறமையும் வெளிப்படுத்தும் விதமாக செயல்பட்ட சுனில் ஜோஷி, 10 ஓவரில் 6 மெய்டன், வெறும் 6 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்திய அணியில் விளையாடிய இடது கை ஸ்பின்னர்களில் இதுவே இன்று வரையும் சிறந்த பவுலிங்காக தொடர்கிறது. 2001க்கு பிறகு செளரவ் கங்குலி கேப்டன்சியில் அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட, தனக்கான வாய்ப்பை இழந்தார் சுனில் ஜோஷி

ஆர்சிபி அணியில் ஜோஷி

ஐபிஎல் தொடங்கிய முதல் சீசனான 2008இல் ஆர்சிபி அணிக்காக 4 போட்டிகளில் களமிறங்கினார். 2009 சீசனிலும் அவர் அணியில் இடம்பிடித்திருந்தபோதிலும் களமிறக்கப்படவில்லை.

2012ஆம் ஆண்டு அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் சுனில் ஜோஷி ஓய்வை அறிவித்தார்.

பயிற்சியாளராக ஜோஷி

ஓய்வுக்கு பின்னர் ஹைதராபாத் கிரிக்கெட் அணி, காஷ்மீர் கிரிக்கெட் அணி, அஸ்ஸாம் கிரிக்கெட் அணி பயிற்சியாளராக இருந்துள்ளார். அதேபோல் 2016ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் ஓமன் அணிக்கு பவுலிங் பயிற்சியாளராக செயல்பட்டார்.

ஸ்பின் பவுலிங் பயிற்சியாளராக யுஎஸ்ஏ அணிக்கும். ஸ்பின் பவுலிங் கன்சல்டன்ட் ஆக வங்கதேச அணிக்கும் இருந்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக இருந்துள்ளார். 2020இல் இந்திய அணியின் தலைமை தேர்வாளராக பிசிசிஐ இவரை நியமித்தது.

சுனில் ஜோஷி சாதனைகள்

இந்தியாவுக்காக இடது கை ஸ்பின்னர்களில் சிறந்த பவுலிங், சிறந்த எகானமி வைத்திருப்பவராக சுனில் ஜோஷி உள்ளார். டெஸ்ட், ஒரு சேர்த்து 84 போட்டிகளில் 110 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

90ஸ் காலகட்டத்தில் இந்திய அணியில் சிறந்த லோயர் ஆர்டர் பேட்ஸ்மேனாக செயல்பட்டதோடு, பல போட்டிகளில் சிறிய கேமியோ ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு சிறந்த பங்களிப்பை அளிக்கும் வீரராக இருந்துள்ள சுனில் ஜோஷிக்கு இன்று பிறந்தநாள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.