Team India: புஜாரா, ரஹானேவுக்கு கல்தா - கோலி, ரோஹித் கிடையாது! தென் ஆப்பரிக்கா தொடருக்கான இந்திய அணி விவரம் இதோ
தென் ஆப்பரிக்கா சுற்றுப்பயணத்தில் விளையாட இருக்கும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. விராட் கோல், ரோஹித் ஷர்மா ஆகியோர் டி20, ஒரு நாள் கிரிக்கெட் அணியில் இடம்பெறவில்லை.
டிசம்பர் மாதம் தென் ஆப்பரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 என மூன்று வகை போட்டிகளிலும் விளையாடுகிறது. முதலில் இரு அணிகளுக்கு இடையே மூன்று டி20 போட்டிகள் நடைபெறுகின்றன. டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கும் டி20 தொடர் டிசம்பர் 16 வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகல் டர்பன், க்கெபெர்ஹா, ஜோகன்னஸ்பர்க் ஆகிய நகரில் நடக்கிறது.
இதைத்தொடர்ந்து டிசம்பர் 17 முதல் 21 வரை மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெறுகிறது. இந்த போட்டிகள் ஜோகன்னஸ்பெர்க், க்கெபெர்ஹா, பார்ல் ஆகிய மைதானங்களில் நடைபெறுகிறது.
இதன் பின்னர் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் முதல் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி சென்சுரியனில் தொடங்குகிறது. இது பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக அமைகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி கேப்டவுனில் நடைபெறுகிறது.
இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இருந்து ப்ரேக் வேண்டும் என கேட்டுகொண்டதன் பேரில் அவர்கள் இருவரும் அணியில் இடம்பெறவில்லை. அதேபோல் முகமது ஷமி தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருவதால், அவர் அணியில் இடம்பெறுவது பிட்னஸை பொறுத்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தின் போது இந்தியா ஏ - தென் ஆப்பரிக்கா ஏ அணி இரண்டு நான்கு நாள் போட்டியில் விளையாடவுள்ளது.
இந்த தொடருக்கான மூன்று வகையான போட்டிகளிலும் பங்கேற்கும் இந்திய அணிகளின் முழு விவரம்:
அதன்படி, மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி: ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, ரஜத் படிதார், ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் , முகேஷ் குமார், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர்.
மூன்று டி20 போட்டிகளுக்கான இந்திய அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர் , ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது. சிராஜ், முகேஷ் குமார், தீபக் சாஹர்.
இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது. சிராஜ், முகேஷ் குமார், முகமது. ஷமி*, ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), பிரசித் கிருஷ்ணா.
இந்திய டெஸ்ட் அணியில் சத்தேஷ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானா ஆகியோருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டி20 அணியில் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். அதேபோல் ஒரு நாள் அணியில் சஞ்சு சாம்சன், வாஷிஹ்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், ஆவேஷ் கான், தீபக் சாஹர், அர்ஷ்தீப் சிங், சாய் சுதர்சன், ரிங்கு சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்