T20 World cup, SL vs SA: நான்கு பேர் டக் அவுட்! இலங்கை பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைத்த அன்ரிச் நார்ட்ஜே
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  T20 World Cup, Sl Vs Sa: நான்கு பேர் டக் அவுட்! இலங்கை பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைத்த அன்ரிச் நார்ட்ஜே

T20 World cup, SL vs SA: நான்கு பேர் டக் அவுட்! இலங்கை பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைத்த அன்ரிச் நார்ட்ஜே

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 04, 2024 10:39 AM IST

பேட்டிங் செய்ய கடினமாக இருந்த பிட்சில் பவுலிங்கில் கலக்கிய தென் ஆப்பரிக்கா, இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. தென் ஆப்பரிக்கா வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே இலங்கை பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைத்தார். அந்த அணியில் நான்கு பேர் டக் அவுட்டாகியுள்ளனர்.

இலங்கை பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைத்த அன்ரிச் நார்ட்ஜே
இலங்கை பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைத்த அன்ரிச் நார்ட்ஜே (PTI)

இலங்கை பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் வானிந்து ஹசரங்கா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தென்ஆப்பரிக்கா பவுலிங்கை சமாளிக்க முடியாமல் இலங்கை பேட்ஸ்மேன் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.

19.1 ஓவரில் 77 ரன்கள் எடுத்து இலங்கை அணி ஆல்அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக குஷால் மெண்டிஸ் 19, ஏஞ்சலோ மேத்யூஸ் 16 ரன்கள் அடித்தனர்.

இலங்கை இன்னிங்ஸில் மொத்தம் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரி மட்டுமே அடிக்கப்பட்டன. அத்துடன் மூன்று பேர் மட்டும் இரட்டை இலக்கத்தில் ரன்கள் அடித்தனர். நான்கு பேர் டக் அவுட் ஆனார்கள்.

பவுலிங்கில் கதிகலங்க வைத்த நார்ட்ஜே

தென் ஆப்பரிக்கா பவுலர்கள் சிறப்பாக பவுலிங் செய்து இலங்கை பேட்ஸ்மேன்களை ரன் அடிக்க விடாமல் கட்டுப்படுத்தினர். வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே, பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைக்கும் விதமாக பவுலிங் செய்ததோடு 4, நான்கு ஓவரில் வெறும் 7 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா 2, கேசவ் மகாராஜ் 2 விக்கெட்டுகளையும், ஒட்னீல் பார்ட்மேன் ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். மார்கோ ஜான்சென் மட்டும் விக்கெட் வீழ்த்தவில்லை.

தென் ஆப்பரிக்கா சேஸிங்

மிக எளிய இலக்காக இருந்தாலும் பேட்ஸ்மேன்களுக்கு சவால் விடுக்கும் விதமாக ஆடுகளம் இருந்ததால் தென் ஆப்பரிக்கா பேட்ஸ்மேன்களும் பேட்டிங் செய்து ரன் குவிக்க சற்று திணறினர். இருப்பினும் நிதானத்தை கடைப்பிடித்து 15.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்து, 22 பந்துகள் எஞ்சியிருக்க தென் ஆப்பரிக்கா வெற்றி பெற்றது.

தென் ஆப்பரிக்கா இன்னிங்ஸில் 3 சிக்ஸர்கள், இரண்டு பவுண்டரி மட்டும் அடிக்கப்பட்டது. இலங்கை பவுலர்களில் வனிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நுவான் துஷாரா, தசுன் ஷனகா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

இலங்கை அணியை தனது அற்புத பவுலிங்கால் மிரட்டி, கட்டுப்படுத்திய அன்ரிச் நார்ட்ஜே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

குரூப் டி பிரிவின் முதல் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தியிருக்கும் தென் ஆப்பரிக்கா 2 புள்ளிகளை பெற்றுள்ளது.

டி20 உலகக் கோப்பை தொடரின் 5வது போட்டி குரூப் சி பிரிவில் ஆப்கானிஸ்தான் - உகாண்டா அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி நாளை காலை 6 மணிக்கு தொடங்குகிறது. இது உகாண்டா அணியின் முதல் சர்வதேச டி20 உலகக் கோப்பை போட்டியாக அமையவுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.