IND vs WI 5th T20: சாதனையை தொடர்வாரா பாண்ட்யா? இன்று வெல்லப்போகும் அணிக்கு டி20 கோப்பை
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind Vs Wi 5th T20: சாதனையை தொடர்வாரா பாண்ட்யா? இன்று வெல்லப்போகும் அணிக்கு டி20 கோப்பை

IND vs WI 5th T20: சாதனையை தொடர்வாரா பாண்ட்யா? இன்று வெல்லப்போகும் அணிக்கு டி20 கோப்பை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 13, 2023 09:50 AM IST

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் கடைசி போட்டியாகவும், டி20 வெற்றியாளர் என்பதை தீர்மானிக்கும் போட்டியாகவும் இன்றைய ஆட்டம் அமைந்துள்ளது. ஏற்கனவே டெஸ்ட், ஒரு நாள் தொடரை வென்ற இந்திய அணி டி20 தொடரையும் வென்று வெஸ்ட் இண்டீஸ் தொடரை முழுமையாக வெல்ல முயற்சி செய்யும் என நம்பலாம்

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பவல் - இந்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா
வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பவல் - இந்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (AP)

முதல் இரண்டு போட்டிகளில் இருந்த குறைகளை நீக்கியதன் விளைவாக இந்தியா அடுத்தாக இரண்டு தொடர் வெற்றிகளை பெற முடிந்தது. மூன்று மற்றும் நான்காவது டி20 போட்டியில் விளையாடிய இந்திய அணி வெற்றிக்கான சரியான காம்பினேஷனை கொண்ட அணியாக உள்ளது.

தொடர்ந்து பேட்டிங்கில் பெரிய ஸ்கோர் எடுக்காமல் ஏமாற்றி வந்த சுப்மன் கில் அதிரடியாக பேட் செய்து அரைசதம் அடித்து பார்முக்கு திரும்பியுள்ளார். அந்த வகையில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் பக்காவாக செயல்படும் காம்போ உருவாகியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரை டி20 தொடரில் அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளை பெற்றபோதிலும், ஆதிக்கத்தை செலுத்த முடியாமல் தவித்து வருகிறது. அத்துடன் டெஸ்ட், ஒரு நாள் தொடரை இழந்திருக்கும் அந்த அணி டி20 தொடரை மட்டுமாவது எப்படியாவது வென்று விட வேண்டும் என்கிற முனைப்பில் உள்ளது.

முதல் இரண்டு போட்டிகளில் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி, கடைசி 2 போட்டியில் அதில் கோட்டைவிட்டுள்ளது. எனவே பவுலிங்கை மீண்டும் வலுப்படுத்தினால் மட்டுமே இந்திய அணியை வீழ்த்த முடியும்.

இரு அணிகளில் யார் வெல்கிறார்களோ அவர்களுக்கு கோப்பை என்ற பரபரப்பான சூழ்நிலையில் இன்று கடைசி டி20 போட்டி நடைபெறவுள்ளது. இதுவே இந்த சுற்றுப்பயணத்தின் கடைசி போட்டியாக உள்ளது. அந்த வகையில் பார்த்தால் முழுமையான வெற்றியுடன் தொடரை முடிக்கும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

ஹர்திக் பாண்ட்யாவை பொறுத்தவரை இதுவரை கேப்டன்சி செய்த 4 தொடர்களில் ஒரு முறை கூட தோல்வி அடைந்தது இல்லை. அவரது தனிப்பட்ட சாதனையாக இருந்து வரும் இந்த வெற்றி பயணத்தை தொடர போராடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டி20 உலகக் கோப்பை, பின்னர் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் விளையாடும் வாய்ப்புகளை இழந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி. தற்போது தங்களது டி20 அணியை மறுஉருவாக்கம் செய்து வருவதால் அந்த அணியை பொறுத்தவரை ஒவ்வொரு வெற்றியும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டில் ஏற்கனவே தென்ஆப்பரிக்காவுக்கு எதிரான தொடரை வென்ற வெஸ்ட இண்டீஸ், இந்தியாவுக்கு எதிரான போட்டியையும் வெல்ல முயற்சிக்கும் என எதிர்பார்க்கலாம்.

இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி லாண்டர்ஹில் நகரில் இந்திய நேரப்படி இரவு 8 மணி தொடங்குகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.