IND vs USA Result: 360 டிகிரி வித்தையை காட்டிய சூர்ய குமார்! ஆறுசாமி துபேயின் பிரமாண்ட சிக்ஸ் - சூப்பர் 8இல் இந்தியா
ஒரு கட்டத்தில் மூன்று விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியபோது சூர்யகுமார் யாதவ் - ஷிவம் துபே ஆகியோர் பார்டனர்ஷிப் அமைத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். நன்கு செட்டிலான பிறகு சூர்யகுமார் தனது வழக்கமான பாணி 360 டிகிரி வித்தையை காட்டிய நிலையில், ஷிவம் துபேயும் பிரமாண்ட சிக்ஸ் அடித்தார்.

டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் 25வது போட்டி குரூப் ஏ பிரிவில் இந்தியா - யுஎஸ்ஏ அணிகளுக்கு இடையே நியூயார்க்கில் நடைபெற்றது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் இந்திய அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தனது குரூப்பில் முதல் இடத்தில் இருந்தது. யுஎஸ்ஏ அணியும் 2 போட்டிகள் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று ரன்ரேட் அடிப்படையில் இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது.
அதன்படி இன்றைய போட்டியில் இந்தியா, யுஎஸ்ஏ ஆகிய அணிகளில் ஒன்று, முதல் தோல்வியை சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் களமிறங்கியது. அத்துடன் வெற்றியடையும் அணி இந்த குரூப்பில் முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும் என்கிற வாய்ப்பும் இருந்தது.
இந்திய பவுலிங்கில் அடங்கிய யுஎஸ்ஏ
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த யுஎஸ்ஏ அணி 20 ஓவரில் விக்கெட் இழப்புக்கு ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக நிதிஷ் குமார் 27, ஸ்டீவன் டெய்லர் 24 ரன்கள் அடித்தனர். நல்ல பார்மில் இருந்து வந்த ஆரோன் ஜோன்ஸ் 11 ரன்னில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.