தமிழ் செய்திகள்  /  Cricket  /  Sunrisers Unveiled New Jersey For Ipl 2024 Season

IPL 2024: இந்த சீசனில் சன் ரைசர்ஸுக்கு புது ஜெர்சி! எப்படி இருக்குன்னு பாருங்க

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 08, 2024 10:17 AM IST

ஐபிஎல் 2024 தொடங்குவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே இருந்து வரும் நிலையில், சன் ரைசர்ஸ் அணி இந்த சீசனுக்கான அணியின் ஜெர்சியை வெளியிட்டுள்ளது.

சன் ரைசர்ஸ் ஹைதாபாத் அணிக்கு புதிய ஜெர்சி
சன் ரைசர்ஸ் ஹைதாபாத் அணிக்கு புதிய ஜெர்சி

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீசன் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே இருந்து வரும் நிலையில் இன்னும் முழுமையான அட்டவணை வெளியாகவில்லை. வரும் ஏப்ரல் மே, மாதத்தில் நாடாளுமன்ற தேர்தலும் நடைபெறும் என்பதால் போட்டி அட்டவணை வெளியாவதில் தாமதம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே ஏப்ரல் 7ஆம் தேதி வரை நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் முடிவுற்ற பின்னர் ஜூன் முதல் வாரத்தில் டி20 உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீஸில் நடைபெற இருக்கிறது.

ஒவ்வொரு அணிகளும் ஐபிஎல் தொடருக்காக ஆயத்தமாகி வரும் நிலையில், 2016 சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் இந்த சீசனுக்கான ஜெர்சியை வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, புதிய ஜெர்சியானது வழக்கமான ஆரஞ்சு நிறத்தில் இருந்து மாறாமல், ஆரஞ்சு கருப்பு இணைந்த ஸ்டிரைப்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேன்ட் நிறமானது கருப்பு வண்ணத்திலும் இரு பக்கவாட்டிலும் ஆரஞ்சு நிறத்தில் பெரிய லைனிங்கும் இடம்பெற்றுள்ளது.

இந்த புதிய ஜெர்சி SA20 லீக்கில் இடம்பிடித்திருக்கும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிந்திருக்கும் ஜெர்சி போன்ற லுக்கில் அமைந்துள்ளது. இதுவரை நடைபெற்று முடிந்திருக்கும் SA20 லீக் இரண்டு சீசன்களிலும் சன்ரைசர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

எனவே அந்த அணிக்காக வடிவமைக்கப்பட்ட ஜெர்சி போன்று ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஜெர்சி அந்த அணிக்கு அதிர்ஷ்டமாக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

புதிய கேப்டன்

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற மினி ஏலத்தில் ஆஸ்திரேலியாவுக்கு உலகக் கோப்பை வென்று கொடுத்த கேப்டனான பேட் கம்மின்ஸை ரூ. 20.50 கோடிக்கு ஏலம் எடுத்தது சன் ரைசர்ஸ். இதையடுத்து அவர்தான் அணியின் இந்த சீசனுக்கான புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2023 சீசனில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 14 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டும் பெற்று, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.

சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் தனது முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி மார்ச் 23ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது

சன் ரைசர்ஸ் அணி முழுவிவரம்:

அப்துல் சமாத், அபிஷேக் ஷர்மா, ஐடன் மார்கரம், மார்கோ ஜான்சென், ராகுல் த்ரிபாதி, வாஷிங்டன் சுந்தர், கிளென் பிளிப்ஸ், சன்வீர் சிங், ஹென்ரிச் கிளாசன், புவனேஷ்வர் குமார், மயங்க் அகர்வால், நடராஜன், அமோல் ப்ரீத் சிங், மயங்க் மார்கண்டே, உபேந்திரா சிங் யாதவ், உம்ரான் மாலிக், நிதிஷ் குமார் ரெட்டி, பசல்ஹக் பரூக்கி, ஷபாஸ் அகமது, ட்ராவிஸ் ஹெட், வனிந்து ஹசரங்கா, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஜெயதேவ் உனத்கட், ஆகாஷ் சிங், ஜாதவேத் சுப்ரமணியன்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

IPL_Entry_Point