SRH vs RR Qualifier 2: எதிர்பாராத டுவிஸ்ட்! பவுலிங்கில் திருப்புமுனை தந்த அபிஷேக் ஷர்மா - பைனலில் நுழைந்த சன் ரைசர்ஸ்
SRH vs RR Qualifier 2: எதிர்பாராத டுவிஸ்ட் ஆக சன் ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ், அபிஷேக் ஷர்மாவுக்கு பவுலிங் கொடுத்தார். கைமேல் பலனாக இரண்டு முக்கிய விக்கெட்டுகளை எடுத்த அபிஷேக் ஷர்மா பவுலிங்கில் திருப்புமுனை தந்தார். இந்த வெற்றியால் மூன்றாவது முறையாக ஐபிஎல் பைனலில் சன் ரைசர்ஸ் நுழைந்துள்ளது.

பவுலிங்கில் திருப்புமுனை தந்த அபிஷேக் ஷர்மா, பைனலில் நுழைந்த சன் ரைசர்ஸ் (PTI)
ஐபிஎல் 2024 தொடரின் இரண்டாவது குவாலிபயர் போட்டி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இதே மைதானத்தில் வரும் ஞாயிற்றுகிழமை எதிர்கொள்ளும்.
இதையடுத்து இந்த போட்டியில் சன் ரைசர்ஸ் ஐடன் மார்க்ரம், ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
சன் ரைசர்ஸ் ரன்குவிப்பு
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் 175 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசன் 50, ராகுல் த்ரிபாதி 37, ட்ராவிஸ் ஹெட் 34 ஆகியோர் எடுத்தனர்.
