GT vs PBKS Innings Break: சதத்தை மிஸ் செய்த கில்! திவாட்டியா அதிரடி கேமியோ - பஞ்சாப்புக்கு எதிராக குஜராத் ரன் குவிப்பு
அதிரடி, நிதானம் என கலந்து கடைசி ஓவர் வரை பேட் செய்த சுப்மன் கில், சதத்தை மிஸ் செய்த போதிலும் 89 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் 199 ரன்கள் எடுக்க முக்கிய காரணமாக அமைந்தார். பஞ்சாப் பவுலர்கள் அனைவரின் ஓவர்களையும் கில் அடித்து நொறுக்கினார்.
ஐபிஎல் 2024 தொடரின் 17வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டி தொடங்குவதற்கு முன் குஜராத் அணி 3 போட்டிகளில் 2 வெற்றியுடன் 6வது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் அணி 3 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் 7வது இடத்தில் உள்ளது.
குஜராத் அணியில் டேவிட் மில்லருக்கு பதிலாக கேன் வில்லியம்சன் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சீசனில் அவர் களமிறங்கும் முதல் போட்டியாக இது அமைந்துள்ளது. அதேபோல் பஞ்சாப் கிங்ஸ் அணியில் லியாம் லிவிங்ஸ்டனுக்கு பதிலாக சிகந்தர் ராசா சேர்க்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் பவுலிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகந்தர் தவான் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவிரில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்துள்ளது.
அணியின் கேப்டன் சுப்மன் கில் பொறுப்புடன் பேட் செய்து அதிகபட்சமாக 89 ரன்கள் அடித்தார். இவருக்கு அடுத்தபடியாக சாய் சுதர்சன் 33, கேன் வில்லியம்சன் 26 ரன்கள் அடித்தனர்.
கடைசி கட்டத்தில் சிறிய கேமியோ இன்னிங்ஸ் வெளிப்படுத்திய ராகுல் திவாட்டியா 23 ரன்கள் அடித்தார்
பஞ்சாப் பவுலர்களில் ககிசோ ரபாடா 2 விக்கெட்டுகளை எடுத்தார். ஹர்ப்ரீத் ப்ரார், ஹர்ஷல் படேல் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
சதத்தை மிஸ் செய்த கில்
குஜராத் அணியின் கேப்டனும் ஓபனிங் பேட்ஸ்மேனுமான கில் பொறுப்புடன் பேட் செய்தார். முதல் விக்கெட்டாக மற்றொரு ஓபனிங் பேட்ஸ்மேன் விருத்திமான சாஹா 11 ரன்னில் வெளியேறினார். பின்னர் பேட் செய்ய வந்த கேன் வில்லியம்சனுடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தர் கில். வில்லியம்சனும் தனது பாணியில் நிதானமாக பேட் செய்து ரன் குவித்து வந்த நிலையில் 22 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து அவுட்டானார். கில் - வில்லயம்சன் இணைந்து 40 ரன்கள் எடுத்தனர்.
வில்லியம்சனுக்கு அடுத்தபடியாக வந்த தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சனுடன் இணைந்தும் பார்ட்னஷிப் அமைத்தார் கில். இதையடுத்து அவர் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். கொஞ்சம் அதிரடியாக பேட் செய்த சாய் சுதர்சன் 19 பந்துகளில் 33 ரன்கள் அடித்து வெளியேறினார்.
ஒரு புறம் விக்கெட்டுகள் சாய்ந்தாலும் கடைசி வரை நிலைத்து நின்று பேட் செய்த கில், 48 பந்துகளில் 89 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் தனது இன்னிங்ஸில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்களை அடித்தார்.
ராகுல் திவாட்டியா அதிரடி
ஆட்டத்தின் 17வது ஓவரில் பேட் செய்ய வந்த திவாட்டியா ஆரம்பம் முதலே அதிரடி காட்ட தொடங்கினார். அடுத்தடுத்து பவுண்டரிகளையும், டபுள்ஸ் எனவும் ரன் குவித்தார். 8 பந்துகளில் 23 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார். ஆட்டத்தின் கடைசி இரண்டு பந்துகளில் பவுண்டரி அடித்து பினிஷ் செய்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.