தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Lsg Vs Gt Innings Break: பேட்ஸ்மேன்களுக்கு சவாலான பிட்ச்! ஸ்டோனிஸ், பூரான் அதிரடியால் லக்னோ ரன் குவிப்பு

LSG vs GT Innings Break: பேட்ஸ்மேன்களுக்கு சவாலான பிட்ச்! ஸ்டோனிஸ், பூரான் அதிரடியால் லக்னோ ரன் குவிப்பு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 07, 2024 09:24 PM IST

ஸ்டோய்னிஸ் அரைசதம், கடைசி நேரத்தில் பூரான் வெளிப்படுத்திய அதிரடியால் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருந்த பிட்சில் லக்னோ அணி 163 ரன்கள் அடித்துள்ளது.

பந்தை ஆஃப் சைடு திசையில் அடிக்கும் மார்கஸ் ஸ்டோய்னிஸ்
பந்தை ஆஃப் சைடு திசையில் அடிக்கும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் (AFP)

ட்ரெண்டிங் செய்திகள்

குஜராத் அணியில் முதுகு வலி காரணமாக விருத்திமான சாஹா சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக பிஆர் ஷரத் சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் முதல் ஐபிஎல் போட்டியில் களமிறங்குகிறார். கடந்த போட்டியில் விளையாடாத ஸ்பென்சர் ஜான்சனும் அணிக்கு திரும்பியுள்ளார். லக்னோ அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை

லக்னோ பேட்டிங்

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல், பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் 58 ரன்கள் அடித்தார். இவருக்கு அடுத்தபடியாக  கேஎல் ராகுல் 33, நிக்கோலஸ் பூரான் 32 ரன்கள் எடுத்தனர். பேட்டிங்கில் சொதப்பி வந்த ஆயுஷ் பதோனி 20 ரன்கள் எடுத்தார்.

குஜராத் பவுலர்களில் உமேஷ் யாதவ், தர்ஷன் நல்கண்டே தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரஷித் கான் ஒரு விக்கெட்டை எடுத்தார்.

கேஎல் ராகுல் - ஸ்டோய்னிஸ் பார்ட்னர்ஷிப்

கடந்த மூன்று போட்டிகளாக சிறப்பாக பேட் செய்து வந்த குவன்டைன் டி காக் 6 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். இவரை தொடர்ந்து பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வந்த தேவ்தத் படிக்கல் மீண்டும் ஒரு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 7 ரன் எடுத்து அவர் பெவிலியன் திரும்பின்ர்.

தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்த போதிலும், ஓபனிங்கில் களமிறங்கிய கேஎல் ராகுல் - மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் பொறுப்புடன் பேட் செய்து விக்கெட் சரிவை தடுத்து ரன்கள் குவித்தனர். இருவரும் இணந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்தனர்.

பேட்டிங் செய்வதற்கு பிட்ச் சவாலாக இருந்தபோதிலும் அடிக்க வேண்டிய பந்துகளை அடித்த பவுண்டரி, சிக்ஸர்களாக மாற்றினர். கேஎல் ராகுல் 31 பந்தில் 33 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

மறுமுனையில் நன்றாக விளையாடி வந்த ஸ்டோய்னிஸ் அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

நிக்கோலஸ் பூரான்

கேஎல் ராகுலுக்கு அடுத்தபடியாக வந்த நிக்கோலஸ் பூரான் விரைவாக ரன் குவிப்பில் ஈடுபட்டார். அரைசதம் அடித்த பின்னர் ஸ்டோய்னிஸ் 43 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரை தொடர்ந்து வந்த இளம் பேட்ஸ்மேன் ஆயுஷ் பதோனி சிறிய கேமியோ ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ரன்கள் அடித்து வெளியேறினார்.

தொடர்ந்து கடைசி வரை பேட் செய்த நிக்கோலஸ் பூரான் 22 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். தனது இன்னிங்ஸில் 3 சிக்ஸர்களை அவர் பறக்கவிட்டார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point