IND W vs SL W: 20 ஆண்டு கனவு..! முதல் முறையாக மகளிர் ஆசிய கோப்பையை முத்தமிட்ட இலங்கை மகளிர்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind W Vs Sl W: 20 ஆண்டு கனவு..! முதல் முறையாக மகளிர் ஆசிய கோப்பையை முத்தமிட்ட இலங்கை மகளிர்

IND W vs SL W: 20 ஆண்டு கனவு..! முதல் முறையாக மகளிர் ஆசிய கோப்பையை முத்தமிட்ட இலங்கை மகளிர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 29, 2024 11:41 AM IST

ஐந்து முறை பைனல் வரை சென்று ரன்னர்அப்பாக வெளியேறிய இலங்கை மகளிர் அணி, முதல் முறையாக மகளிர் ஆசிய கோப்பையை முத்தமிட்டுள்ளது. இந்திய மகளிர் அணியினர் புரட்டி எடுத்த அட்டப்பட்டு, சமரவிக்ரமா ஆசிய சாம்பியன் ஆவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தனர்.

முதல் முறையாக மகளிர் ஆசிய கோப்பையை முத்தமிட்ட இலங்கை மகளிர்
முதல் முறையாக மகளிர் ஆசிய கோப்பையை முத்தமிட்ட இலங்கை மகளிர் (PTI)

இந்தியா மகளிர் பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த இந்திய மகளிர் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது.

ஓபனரும், ஸ்டார் பேட்டருமான ஸ்மிருதி மந்தனா 60, ரிச்சா கோஷ் 30, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 29 ரன்கள் எடுத்தனர்.

இலங்கை சேஸிங்

இதையடுத்து 166 ரன்களை விரட்டிய இலங்கை மகளிர் 18.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து வெற்றியை பெற்றது. இதன் மூலம் முதல் முறையாக மகளிர் ஆசிய கோப்பையை வென்று சாதித்துள்ளது.

ஏற்கனவே ஐந்து முறை பைனல் வரை வந்து ரன்னர்அப் ஆன இலங்கை மகளிர், ஆறாவது முயற்சியில் சாம்பியன் ஆகியுள்ளது.

ஹர்ஷிதா சமரவிக்ரமா 69, அணியின் கேப்டனும், ஓபனருமான சமாரி அட்டபட்டு 61 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

சறுக்கிய இந்தியா மகளிர்

முன்னதாக, மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இந்திய மகளிர் லீக் போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற்றதுடன், தோல்வியை சந்திக்காத அணியாக இந்தியா மகளிர் பைனலில் நுழைந்தது. இதைப்போல் இலங்கை மகளிர் அணியும் தங்களது குழுவில் தோல்வியை சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு வந்தது.

இந்தியா மகளிர், இலங்கை மகளிர் அணிகள் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டது. இருப்பினும் இறுதியிலும் அதை தொடர்ந்த இலங்கை மகளிர் அணி சாம்பியன் ஆனது. பவுலிங்கில் சறுக்கிய இந்தியா மகளிர் தோல்வியை தழுவியதோடு, எட்டாவது ஆசிய மகளிர் கோப்பை வெல்லும் என்ற எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் போனது.

20 ஆண்டு கனவு

ஆசிய மகளிர் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2004 முதல் நடைபெற்று வருகிறது. இதில் 2004 முதல் 2008 வரை தொடர்ந்து நான்கு முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இலங்கை. ஆனால் இந்த நான்கு முறையும் இந்தியா மகளிர் அணிக்கு எதிராக விளையாடி தோல்வியை தழுவி ரன்னர்அப் ஆனது.

இதைத்தொடர்ந்து கடந்த 2022 நடந்த மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் மீண்டும் இந்தியாவுக்கு எதிராக விளையாடி தோல்வியடைந்தது. ஐந்து முறை பைனல் வரை சென்று கோப்பையை தவறவிட்ட இலங்கை மகளிர் ஆறாவது முயற்சியில் ஆதிக்கமிக்க ஆட்டத்தால் இந்தியா மகளிர் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆகியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.