HBD Lasith Malinga: இலங்கையின் World cup Winning கேப்டன் - துல்லிய யார்க்கரால் பேட்ஸ்மேன்களை அதிர வைத்த பவுலர்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Hbd Lasith Malinga: இலங்கையின் World Cup Winning கேப்டன் - துல்லிய யார்க்கரால் பேட்ஸ்மேன்களை அதிர வைத்த பவுலர்

HBD Lasith Malinga: இலங்கையின் World cup Winning கேப்டன் - துல்லிய யார்க்கரால் பேட்ஸ்மேன்களை அதிர வைத்த பவுலர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 28, 2023 06:20 AM IST

ஆரம்பத்தில் மலிங்காவின் பவுலிங் ஸ்டைல் விநோதமாக இருந்ததோடு மட்டுமில்லாமல் சர்ச்சையயும் கிளப்பியது. ஆனால் ஐசிசி விதிமுறைப்படி அவர் பவுலிங் செய்யும் விதம் சரியானது தான் என்ற சொல்லப்பட்ட விஷயம் ஆச்சர்யமாகவே பார்க்கப்பட்டது.

இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா
இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா

ஆரம்பத்தில் இரவது பவுலிங் ஸ்டைல் விநோதமாக பார்க்கப்பட்டது. இது பற்றி சில பேட்ஸ்மேன்கள் ஆட்சோபனையும் தெரிவித்தினர். ஆனால் ஐசிசி விதிமுறைக்கு உட்பட்டு இவரது பவுலிங் ஸ்டைல் உள்ளது என உறுதி செய்யப்பட்டது பலருக்கும் ஆச்சர்யம் கலந்த விஷயமாகவே அமைந்தது.

இலங்கை அணியின் வெள்ளை பந்து போட்டிகளில் சிறந்த டெத் பவுலராக ஜொலித்தவர் மலிங்கா. சொல்லப்போனால் பவுலிங்கில் இவரை பினிஷர் என்றே கூறலாம். இவரது தனித்துவமான பவுலிங் ஸ்டைலை வைத்து ஸ்லிங் மலிங்கா என்ற பட்டப்பெயரும் உள்ளது.

இளம வீரராக அணியில் களமிறங்கியபோது தனது வித்தியாச பவுலிங்கால் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும் பவுலராக மாறிய மலிங்கா பின்னர், முடிந்த நன்கு வளர்த்து பறட்டை தலைமுடியுடன் வித்தியாச லுக்கில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் வரையிலும் தோன்றினார்.

வழக்கத்தை மீறிய இவரது unorthodox bowling action மூலம் ஸ்லோ பந்துகள், ஸ்லோ யார்க்கர்கள், அதி வேகத்தில் துல்லிய யார்க்கர்கள் என பேட்ஸ்மேன்களை மிரட்டும் பவுலராக இருந்துள்ளார். இதன் விளைவாக பல்வேறு சாதனைகளையும் இவர் நிகழ்த்தியுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு முறை ஹாட்ரிக் எடுத்த வீரர், 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை இரண்டு முறை எடுத்த வீரர், ஒரு நாள் போட்டிகளில் மூன்று ஹாட்ரிக் எடுத்த ஒரே வீரர், சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வகை கிரிக்கெட்டுகளையும் சேர்த்து 5 ஹாட்ரிக் எடுத்த ஒரே வீரர் என்ற பல்வேறு பெருமைகளுக்கும் சொந்தக்காரராக உள்ளார்.

டி20 போட்டிகளை பொறுத்தவரை 100 சர்வதேச விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரராக உள்ளார் மலிங்கா. ஐபிஎல் தொடரை பொறுத்தவரை தொடக்க சீசன் 2008 முதல் 2020 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் ஒரே அணிக்காக விளையாடிய வீரராக இருந்து வரும் மலிங்கா, மும்பை அணி வென்ற 5 ஐபிஎல் கோப்பைகளிலும் அணியில் முக்கிய வீரராக இடம்பிடித்தார்.

அதேபோல் இலங்கை அணி 2014ஆம் ஆண்டில் முதல் டி20 உலகக் கோப்பையை வென்றது. அந்த அணி 2002 சாம்பியன்ஸ் கோப்பைக்கு பின்னர் வென்ற ஐசிசி தொடராக அமைந்த டி20 உலகக் கோப்பை அணிக்கு கேப்டனாக பொறுப்பு வகித்தவர் மலிங்காதான்.

அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து 2021இல் ஓய்வை அறிவித்த மலிங்கா தற்போது பிரான்சைஸ் கிரிக்கெட் போட்டிகளில் பயிற்சியாளராக இருந்து வருகிறார். தனது அற்புத பவுலிங்கை பயத்தை காட்டிய இலங்கையின் காலே நகரை சேர்ந்த மலிங்கா இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.