HBD Arjuna Ranatunga: இலக்கை கிரிக்கெட் அணியின் தோனி! உலகக் கோப்பை வென்றது முதல் பல மாற்றங்களை கொண்டு வந்த கேப்டன்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Hbd Arjuna Ranatunga: இலக்கை கிரிக்கெட் அணியின் தோனி! உலகக் கோப்பை வென்றது முதல் பல மாற்றங்களை கொண்டு வந்த கேப்டன்

HBD Arjuna Ranatunga: இலக்கை கிரிக்கெட் அணியின் தோனி! உலகக் கோப்பை வென்றது முதல் பல மாற்றங்களை கொண்டு வந்த கேப்டன்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 01, 2023 06:10 AM IST

இலங்கை அணிக்காக 1982 முதல் 2000 வரை ஒரு நாள், டெல்ட் போட்டிகள் என 18 ஆண்டுகள் விளையாடிவர் அர்ஜுநா ரணதுங்கா. இலங்கை அணிக்காக 1996 உலகக் கோப்பை தொடரை வென்று கொடுத்த கேப்டனாகவும், அணியில் பல்வேறு மாற்றங்களை செய்து இலங்கை அணியை பலமிக்க அணியாக உருமாற்றியவராகவும் இருந்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா (icc twitter)

இலங்கை அணி விளையாடிய முதல் டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம்பிடித்திருந்த ரணதுங்கா, அந்த போட்டியில் அரைசதமும் அடித்தார். இதன் மூலம் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட்டில் அரைசதமடித்த முதல் வீரர் என்ற சாதனை புரிந்தார்.

புகழ் பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இலங்கை அணியின் முதல் டெஸ்ட் வெற்றி 1984இல் நிகழ்ந்தது. அந்த போட்டியில் இடம்பிடித்த வீரர்களுள் ஒருவராக ரணதுங்கா உள்ளார். இலங்கை அணி 1986ஆம் ஆண்டில் முதல் முறையாக ஆசிய கோப்பை வென்ற போட்டியில் இடம்பிடித்த இவர் 1988இல் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார்.

கத்துக்குட்டியாக இருந்த இலங்கை அணியை அச்சுறுத்தும் அணியாக மாற்றியதில் இவர் முக்கிய பங்கு வகித்தார். திறமையான வீரர்களை கண்டறிந்து வாய்ப்பு வழங்குவதிலும், அணியில் இருக்கும் வீரர்களிடம் முழு திறமையும் வெளிப்படுத்த வைப்பவராக இருந்தார்.

இதன் விளைவாக 1996 உலகக் கோப்பை தொடரில் அசைக்க முடியாத அணியாக உருவெடுத்த இலங்கை அணி, சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

பிட்னஸ் விஷயத்தில் பெரிதாக அலட்டிக்கொள்ளாத ரணதுங்கா குண்டான தோற்றத்தை கொண்டவராக இருந்தார். இதனால் இவர் பலமுறை விமர்சிக்கப்பட்டார்.

இலங்கை அணியின் ஜாம்பவான் வீரர் முத்தையா முரளிதரன் பந்து வீசுவது தொடர்பாக எழுந்த சர்ச்சையின்போது அவருக்கு முழு ஆதரவாக செயல்பட்டார் ரணதுங்கா.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அரசியல் பக்கம் ஒதுங்கிய அவர் இலங்கையில் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்ட போது இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் என கடுமையாக விமர்சித்தார். அதேபோல் 2011 உலகக் கோப்பை தொடரை இந்தியா வென்றபோது மேட்ச் பிக்ஸிங் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இவர் மீதும் மேட்ச் பிக்ஸிங், மீடூ குற்றச்சாட்டு போன்றவையும் எழுந்தது. களத்தில் ஆக்ரோஷமான கேப்டனாகவும், பல்வேறு முக்கிய இன்னிங்ஸை வெளிப்படுத்தியவராக இருந்து வந்த ரணதுங்கா களத்துக்கு வெளியேயும் கவனத்தை ஈர்க்கும் விதமாக பல விஷயங்களை செய்துள்ளார்.

இலங்கை அணிக்காக டெஸ்ட், ஒரு நாள் சேர்த்து 249 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். இதன் மூலம் அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்தவர் என்ற பெருமை இவர் வசம் உள்ளது. இந்தியாவுக்கு தோனி எப்படியோ, அதுபோல் இலங்கை கிரிக்கெட்டில் அணியின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகித்த கேப்டனாக திகழ்ந்த அர்ஜுனா ரணதுங்காவுக்கு இன்று பிறந்தநாள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.