தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Srh Vs Csk Preview: புதிய பிட்ச்..! சிஎஸ்கேவுக்கு உருவான சிக்கல் - சன் ரைசர்ஸ் பிளான் என்ன?

SRH vs CSK Preview: புதிய பிட்ச்..! சிஎஸ்கேவுக்கு உருவான சிக்கல் - சன் ரைசர்ஸ் பிளான் என்ன?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 05, 2024 06:30 AM IST

ஐபிஎல் போட்டியிலேயே அதிகபட்ச ரன்கள் அடித்த பிட்சில் இல்லாமல் ஹைதராபாத் மைதானத்தில் இருக்கும் இன்னொரு ஆடுகளத்தில் சன் ரைசர்ஸ் - சிஎஸ்கே மோதும் போட்டி நடைபெறவுள்ளது. சன் ரைசர்ஸ்க்கு எதிராக நல்ல ரெக்காட்டை கொண்ட அணியாக சிஎஸ்கே உள்ளது.

சன் ரைசர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் மோதல்
சன் ரைசர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் மோதல்

ட்ரெண்டிங் செய்திகள்

சன் ரைசர்ஸ் 3 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் 7வது இடத்திலும்,, சிஎஸ்கே 3 போட்டிகளில் 2 வெற்றியுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

சிஎஸ்கே அணிக்கான நெருக்கடி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஸ்டிரைக் பவுலரும், இடது கை வேகப்பந்து வீச்சாளருமான முஸ்தபிசுர் ரஹ்மான், விசா காரணங்களுக்கு தாயாகம் திரும்பியுள்ளார். அவர் இன்று மதியத்துக்குள் அணியில் இணையாவிட்டால் போட்டியை மிஸ் செய்வார்.

ஐபிஎல் போட்டிகளை 2017 சீசனில் முதல் முறையாக சன் ரைசர்ஸ் அணியில் தான் அவர் களமிறங்கினார், அந்த சீசனில் 17 விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர், ஹைதராபாத் ஆடுகளம் நன்கு பழக்கமானது என்பதால் இந்த போட்டியில் அவர் விளையாடாமல் போனால் சிஎஸ்கேவுக்கு சிக்கலான விஷயமாகவே அமையும்.

அதேபோல் ஸ்பின்னர்களை, குறிப்பாக இடது கை ஸ்பின்னர்களை சன் ரைசர்ஸ் பேட்ஸ்மேன் வெளுத்து வாங்கு வருகிறார். இந்த சூழ்நிலையில், சிஎஸ்கே அணியின் இடது கை ஸ்பின்னர் ஜடேஜாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கிளாசனை அவர் எப்படி சமாளிக்க போகிறார் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது

பேட்டிங்கை பொறுத்தவரை பக்காவாக இருந்து வரும் சிஎஸ்கே, அதில் பெரிதாக மாற்றம் செய்யாது என்றே தெரிகிறது. ஒரு வேலை முஸ்தபிசுர் விளையாட முடியாமல் போனால், மகேஷ் தீக்‌ஷனா அணிக்கு மீண்டும் திரும்பலாம்.

ஸ்பின் பவுலிங்கில் சொதப்பும் சன் ரைசர்ஸ்

பேட்டிங்கில் ட்ராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, ஹென்ரிச் கிளாசன் ஆகியோரின் உச்சகட்ட பார்ம் எதிரணிக்கு தலைவலிதான். ஐடன் மார்க்ரமும் சிறப்பாக பேட் செய்து வருகிறார். ஆனாலும் ஓபனர் மயங்க் அகர்வால் இன்னும் பெரிய இன்னிங்ஸை வெளிப்படுத்தாமல் இருப்பதால் அவரது பேட்டிங் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பவுலிங்கை பொறுத்தவரை யார்க்கர் மன்னன் நடராஜன், புவனேஷ்வர் குமார், பேட் கம்மின்ஸ் என வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கின்ற போதிலும் பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலை தரும் ஸ்பின்னர்கள் இல்லாமல் இருப்பது பின்னடைவான விஷயமாகவே உள்ளது. இளம் வீரர்களான மயங்க் மார்கண்டே, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சொல்லிக்கொள்ளும் விதமாக இதுவரை பவுலிங் செய்யவில்லை.

சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் ஷிவம் டூபே, டேரில் மிட்செல் போன்றோர் ஸ்பின் பவுலிங்கை சிறப்பாக எதிர்கொள்வார்கள் என்பது அந்த அணிக்கு சிக்கல்தான். இதை வைத்து பார்க்கையில் இரண்டு ஸ்பின்னர் இல்லாமல் சன் ரைசர்ஸ் களமிறங்கும் என்றே தெரிகிறது. 

இந்த போட்டியில் சிஎஸ்கே, சன் ரைசர்ஸ் அணிக்கும் ஒரே சிக்கலாக ஸ்பின் பவுலிங் இருந்து வருகிறது. இதிலிருந்து தப்பிக்க பக்காவாக பிளான் செய்யும் அணியே கரை சேரும். 

பிட்ச் நிலவரம்

ஐபிஎல் போட்டிகளிலேயே அதிக ரன்கள் சன் ரைசர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் போட்டிகளுக்கு இடையே இந்த சீசனில் அடிக்கப்பட்டது. அந்த போட்டியில் பயன்படுத்திய பிட்ச் இன்றைய ஆட்டத்தில் பயன்படுத்தபோவதில்லை.

புதிய கருமணல் பிட்ச்சில் சன்ரைசர்ஸ் - சிஎஸ்கே போட்டிகள் நடக்கவுள்ளது. வறட்சியாக காணப்படும் பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கும், ஸ்பின்னர்களுக்கும் கைகொடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

சன் ரைசர்ஸ் - சிஎஸ்கே இதுவரை

இந்த அணிகள் இதுவரை மோதிக்கொண்ட 19 போட்டிகளில் சிஎஸ்கே 14, சன் ரைசர்ஸ் 5 முறை வெற்றி பெற்றுள்ளன. கடந்த சீசனில் இரு அணிகளும் ஒரு முறை மட்டும் மோதிக்கொண்ட நிலையில் சிஎஸ்கே வெற்றி பெற்றது.

இந்த முறை சன் ரைசர்ஸ் அணிக்கு உள்ளூர் போட்டியாக இருந்து வருகிறது. இந்த சீசனில் உள்ளூர் அணிகளே அதிக வெற்றிகளை குவித்து வருவதால் அந்த சூழ்நிலையை சன் ரைசர்ஸ் சாதகமாக்கி கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point