SL vs IND 1st ODI: ‘ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்..’ வெறும் 1 ரன்னில் வெற்றியை பறிகொடுத்த இந்தியா! - முழு விபரம்!
SL vs IND 1st ODI: கோலிவுடன் ஸ்ரேயாஸ் ஐயர் கரம் கோர்த்தார். போட்டியின் நெருக்கடியை உணர்ந்த ஸ்ரேயாஸ் அதிரடியாக ஆடி பவுண்டிகளை பறக்கவிட்டார். 4 பவுண்ட்ரிகளை அடித்த அவர் மொத்தமாக 23 பந்துகளுக்கு 23 ரன்கள் அடித்தார். - முழு விபரம்!
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது, கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற கேப்டன் ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்கியது. விராட் கோலி, கே.எல். ராகுல், மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோரும் இந்த அணியில் இணைந்தனர். முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங்கை தேர்வு செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை 231 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இதனையடுத்து, இந்தியா சார்பில் ஓப்பனர்களாக ரோகித் ஷர்மா, சுப்மன் கில் களமிறங்கினர். வழக்கம் போல ரோஹித் ஷர்மா தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். ஆனால், அணியின் எண்ணிக்கை 77 ஆக இருந்த போது துனித் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து 16 ரன்னில் விக்கெட்டை இழந்தார். சுப்மன் கில்.
கை கோர்த்த விராட் கோலி
இதனையடுத்து ரோஹித் ஷர்மாவுடன், விராட் கோலி கரம் கோர்த்தார். இரு பெரும் ஜாம்பாவான்கள் களத்தில் இருந்த போதும், துனித்தின் பவுலிங் அட்டாக்கை, இந்திய அணியால் எதிர்கொள்ள முடியவில்லை. அந்த அட்டாக்கில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ரோஹித் ஷர்மா ட்எ.பி.டபுள்யூ முறையில் அவுட்டாகி 58 ரன்னில் வெளியேற, வாஷிடன் சுந்தர் பவுண்ட்ரியோடு தன்னுடைய ஆட்டத்தை தொடங்கினார்.
அகில தனஞ்சய வீசிய பந்தில் தடுமாறி விக்கெட்டை பறிகொடுத்த அவர், வெறும் 5 ரன்களோடு பெவிலியனுக்கு நடையை கட்டினார். இதனையடுத்து கோலிவுடன் ஸ்ரேயாஸ் ஐயர் கரம் கோர்த்தார். போட்டியின் நெருக்கடியை உணர்ந்த ஸ்ரேயாஸ் அதிரடியாக ஆடி பவுண்டிகளை பறக்கவிட்டார். 4 பவுண்ட்ரிகளை அடித்த அவர் மொத்தமாக 23 பந்துகளுக்கு 23 ரன்கள் அடித்தார்.
கோலி அவுட்
விராட் கோலியும், ஸ்ரேயாஸூம் நன்றாக விளையாடிக்கொண்டிருந்த போது, வனிந்து ஹசரங்கா வீசிய பந்தில் கோலி தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். 2 பவுண்ட்ரிகள் அடித்த அவர், 32 பந்துகளுக்கு 24 ரன்கள் அடித்திருந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 131 ஆக இருந்தது.
இதனையடுத்து கே.எல் ராகுல் களமிறங்கினார். அடுத்ததாக ஸ்ரேயாஸ் அவுட் ஆக, அக்சர் படேல் ராகுலுடன் கரம் கோர்த்தார். இந்த ஜோடி நிதானமாக ரன்னை 39 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு அணியின் ஸ்கோரை 185 ரன்களாக மாற்றியது. அணியின் எண்ணிக்கை 196 ஆக இருந்த போது, கே.எல் ராகுல் 31 ரன்னில், தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். இதனையடுத்து ஷிவம் துபே களமிறங்கினார். ஆனால் அடுத்த ஓவரில் அக்சரும் அவுட் ஆக இந்தியாவிற்கு நெருக்கடி அதிகமானது.
இதனையடுத்து குல்தீப் களமிறங்கினார். அணியின் எண்ணிக்கை 213 ஆக இருந்த போது,குல்தீப்பும் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். இதனையடுத்து முகமது சிராஜ் என்ட்ரி ஆனார். வெற்றி பெற இறுதியாக 18 பந்துகளுக்கு 5 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. ஆனால் இலங்கை பந்து வீச்சை இந்தியாவால் சமாளிக்க முடியவில்லை. ஷிவம் துபே எல்.பி.டபுள்யூ முறையில் பெவிலியனுக்கு திரும்ப, அர்ஷ்தீப் சிங் களமிறங்கினார். வெற்றியை அடைய 1 ரன்களே தேவைப்பட்ட நிலையில், 47.5 ஓவர்களுக்கு இந்தியா மொத்த விக்கெட்டுகளையும் இழந்து போட்டியை ட்ரா செய்தது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்