Mohammed Siraj: 'பிளேயர் ஆஃப் தி மேட்ச்' பரிசுத் தொகையை மைதான ஊழியர்களுக்கு வழங்கிய சிராஜ்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Mohammed Siraj: 'பிளேயர் ஆஃப் தி மேட்ச்' பரிசுத் தொகையை மைதான ஊழியர்களுக்கு வழங்கிய சிராஜ்

Mohammed Siraj: 'பிளேயர் ஆஃப் தி மேட்ச்' பரிசுத் தொகையை மைதான ஊழியர்களுக்கு வழங்கிய சிராஜ்

Manigandan K T HT Tamil
Sep 17, 2023 10:41 PM IST

மொஹமட் சிராஜ் தனது 'பிளேயர் ஆஃப் தி மேட்ச்' ரொக்கப் பரிசை கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாச மைதானத்தில் மைதான வீரர்களுக்கு அர்ப்பணித்தார். மைதான ஊழியர்களுக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மூலம் $50,000 பரிசுத் தொகையும் வழங்கப்படும்.

கொழும்பு ஆர்.பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற்ற இலங்கை மற்றும் இந்தியா இடையிலான ஆசிய கோப்பை 2023 இறுதி போட்டியில் இலங்கையின் தனஞ்சய டி சில்வாவின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் ஆர்ப்பரித்த முகமது சிராஜ்.
கொழும்பு ஆர்.பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற்ற இலங்கை மற்றும் இந்தியா இடையிலான ஆசிய கோப்பை 2023 இறுதி போட்டியில் இலங்கையின் தனஞ்சய டி சில்வாவின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் ஆர்ப்பரித்த முகமது சிராஜ். (AFP)

ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ், இலங்கையின் டாப் ஆர்டரைப் பிரமிக்க வைக்கும் வகையில் பந்துவீசினார். இவரது பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல், வரிசையாக வீரர்கள் ஆட்டமிழந்தனர். 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் முகமது சிராஜ்.

ஆட்டநாயகன் விருதுக்கு இவரே தேர்வு செய்யப்பட்டார். பெரிய மனதுடன் ‘பிளேயர் ஆஃப் தி மேட்ச்’-இல் வென்ற ரொக்கப் பரிசை மைதான ஊழியர்களுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார். 5,000 டாலர்கள் பெறுமதியை மைதானத்தின் ஊழியர்களுக்கு வழங்கினார் சிராஜ்.

சிராஜ் ஏழு ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார், இது ஒருநாள் போட்டிகளில் அவரது சிறந்த ஆட்டமாகும். வெறும் 21 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

இதற்கிடையில், போட்டி முடிந்து, ஆசியாவின் சாம்பியனாக இந்தியா உருவெடுத்த பிறகு, ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்ட முகமது சிராஜ் கூறுகையில், "நீண்ட காலமாக நன்றாகப் பந்துவீசுகிறேன். ஆனால், இன்று தான் அதற்கான பலன் கிடைத்தது. இன்று ஸ்விங் கிடைத்தது.ஸ்விங்கின் காரணமாக முழுமையாக பந்துவீசுவேன் என்று நினைத்தேன். வேகப்பந்து வீச்சாளர்களிடையே நல்ல பிணைப்பு இருக்கும் போது அது அணிக்கு உதவியாக இருக்கும் என நினைத்தேன்.  மைதான ஊழியர்கள் இல்லாமல் இந்தப் போட்டி நடந்திருக்காது. எனவே இந்தத் தொகையை அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்." என்றார்.

முன்னதாக, அயராது உழைத்த மைதான பணியாளர்களுக்கு 50,000 அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா தெரிவித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.