Ind vs Zim:கேப்டனாக முதல் போட்டியில் டாஸ் வென்ற கில்! அறிமுகங்களாக களமிறங்கும் மூன்று வீரர்கள் - போட்டியை எங்கு காணலாம்?
கேப்டனாக களமிறங்கும் முதல் போட்டியில் டாஸ் வென்ற சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் மூன்று வீரர்கள் அறிமுகங்களாக களமிறங்குகிறார்கள்.
டி20 உலகக் கோப்பை 2024 தொடர் வெற்றி கொண்டாட்டத்துக்கு பின்னர் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ரவீந்திரா ஜடேஜா ஓய்வு பெற்றிருக்கும் நிலையில், மற்ற முக்கிய வீர்ரகளான சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்ப்ரீத் பும்ரா உள்பட டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற வீரர்களுக்கு ரெஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே சுப்மன் கில் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்தியா அணி, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் விளையாட இருக்கிறது.
இந்தியா பவுலிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இந்திய அணி கேப்டனாக இவர் களமிறங்கும் முதல் போட்டியாக இது அமைந்துள்ளது. போட்டி தொடங்குவதற்கு முன் இந்த போட்டியில் அறிமுக வீரர்களாக களமிறங்கும் ஐபிஎஸ் ஸ்டார்களான அபிஷேக் ஷர்மா, துருவ் ஜூரல், ரியான் பிராக் ஆகியோருக்கு அறிமுக வீரர்களுக்கான தொப்பி வழங்கப்பட்டது.
இதில் துருப் ஜூரல், இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி விளையாடியுள்ளார். மற்ற வீரர்களான அபிஷேக் ஷர்மா, ரியான் பிராக் ஆகியோர் இந்தியாவுக்காக முதல் போட்டியில் களமிறங்குகிறார்கள்.
மூன்று ஸ்டார் வீரர்கள் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், மூன்று இளம் ஸ்டார்கள் இந்திய அணியில் புதிய வீரர்களாக விளையாட இருக்கிறார்கள்.
பிட்ச் நிலவரம்
லேசான புற்கள் மேற்பரப்பில் உள்ளன. கொஞ்சம் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் ஈரப்பதமாக வாய்ப்பு உள்ளது. பிட்ச்சில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படாது என்றே தெரிகிறது. 150 ரன்கள் சராசரி ஸ்கோராக இருக்கலாம். பேட்ஸ்மேன், பவுலர்கள் என இருவருக்கும் சம அளவில் பங்களிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - ஜிம்பாப்வே இதுவரை
இந்த இரு அணிகளும் இதுவரை 8 டி20 போட்டிகள் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 6, ஜிம்பாப்வே 2 முறை வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் இந்தியா அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது. ஜிம்பாப்வே அணி ஒரு வெற்றி, நான்கு தோல்வியை சந்தித்துள்ளது.
இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் விவரம்
இந்தியா லெவன்: ஷுப்மான் கில் (கேப்டன்), அபிஷேக் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ரியான் பராக், ரிங்கு சிங், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், முகேஷ் குமார், கலீல் அகமது
ஜிம்பாப்வே: தடிவானாஷே மருமணி, இன்னசென்ட் கையா, பிரையன் பென்னட், சிக்கந்தர் ராசா (கேப்டன்), ஜோனாதன் காம்ப்பெல், டியான் மியர்ஸ், ஜோனாதன் காம்ப்பெல், கிளைவ் மடண்டே (விக்கெட் கீப்பர்), வெலிங்டன் மசகட்ஸா, வெலிங்டன் மசகட்சா, பிளெசிங் முசரபானி, தென்டை சத்தரா
போட்டியை எங்கு காணலாம்
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 போட்டிகள் சோனி லைவ் சேனலில் நேரலையாக ஒளிப்பரப்பாகிறது. அதேபோல் சோனி லைவ் செயலியில் நேரலை ஸ்டிரீமிங் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்