Shreyas Iyer: தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி டிராபி அரையிறுதியில் ஸ்ரேயாஸ் ஐயர்
தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி டிராபி அரையிறுதிக்கான மும்பை அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளார்.
மார்ச் 2 ஆம் தேதி தொடங்கும் தமிழகத்திற்கு எதிரான ரஞ்சி டிராபி அரையிறுதிக்கான 16 பேர் கொண்ட மும்பை அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் செவ்வாய்க்கிழமை சேர்க்கப்பட்டார்.
பி.கே.சி மைதானத்தில் பரோடாவுக்கு எதிரான காலிறுதி மோதல் டிராவில் முடிந்ததை அடுத்து மும்பை அரையிறுதிக்கு தகுதி பெற்றது, 41 முறை சாம்பியனான மும்பை முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் அரையிறுதியில் நுழைந்தது.
பெரிய ரன்கள் இல்லாதது மற்றும் மீண்டும் முதுகுவலி தொடர்பான பிரச்சினையுடன் போராடுவதால், 29 வயதான ஸ்ரேயாஸ் ஐயர் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை.
இதையடுத்து மும்பை அணியின் காலிறுதி ஆட்டத்தில் ஆல்ரவுண்டர் சிவம் துபேவுடன் ஐயர் விளையாடவில்லை.
முக்கிய ரஞ்சி மோதலில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகிய நேரம், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உள்நாட்டு போட்டிகளில் கட்டாயமாக விளையாட வீரர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அறிவித்தார்.
துபே காயத்தால் குணமடைந்து வரும் நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் முழுமையாக குணமடைந்து தமிழகத்திற்கு எதிரான அரையிறுதியில் விளையாட தயாராக உள்ளார்.
மும்பை அணி: அஜிங்க்யா ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர், பிரித்வி ஷா, பூபன் லால்வானி, அமோக் பட்கல், முஷீர் கான், பிரசாத் பவார், ஹர்திக் தாமோர், ஷர்துல் தாக்கூர், ஷாம்ஸ் முலானி, தனுஷ் கோடியன், ஆதித்யா துமால், துஷார் தேஷ்பாண்டே, மோஹித் அவஸ்தி, ராய்ஸ்டன் டயஸ், தவால் குல்கர்னி.
முன்னதாக, ராஞ்சியில் நடந்துவந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் ரோஹித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் அரைசதம் அடித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி நான்காவது டெஸ்டை வென்றது. அத்துடன், தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
திங்களன்று மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 118-3 என்று இருந்தது, வெற்றிக்கு 74 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்திய அணி அந்த இலக்கை எட்டி ஜெயித்தது. ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது டீம் இந்தியா.
ரோகித் சர்மா 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால், 37 ரன்களில் ஜோ ரூட்டின் பந்தில் அனுபவ வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
கில் நிலைத்து நின்று விளையாடினார். ரஜத் படிதார் டக் அவுட்டான நிலையில், ரவீந்திர ஜடேஜா 4 ரன்களில் நடையைக் கட்டினார். துருவ் ஜுரெல்-கில் பார்ட்னர்ஷிப் சற்று நிலைத்து விளையாடியது.
கில், அரை சதம் விளாசி அசத்தினார். 61 ஓவர்களில் இந்தியா இலக்கை அடைந்து வெற்றி கண்டது. இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜெயித்தது.
முன்னதாக, இங்கிலாந்து அணி 2வது இன்னிங்ஸில் 53.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்களில் ஆட்டமிழந்தது. ஜாக் கிராவ்லி மட்டுமே அரை சதம் விளாசினார்.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 353 ரன்கள் எடுக்க, இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 307 ரன்களை எடுத்தது. முதல் இன்னிங்ஸில் ரோகித் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். யஷஸ்வி 73 ரன்கள் எடுத்தார். துருவ் ஜுரெல் 90 ரன்கள் விளாசினார்.
டாபிக்ஸ்