தமிழ் செய்திகள்  /  Cricket  /  Shreyas Iyer Having Back Issues After Playing 30 Balls; To Be Out Of Eng Tests

Shreyas Iyer: மோசமான பேட்டிங் பார்ம்..! முதுகுவலியால் அவதி - ஷரேயாஸ் ஐயருக்கு கல்தா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 09, 2024 02:35 PM IST

முதுகுவலியால் அவதிக்குள்ளாகி வரும் ஷ்ரேயாஸ் ஐயர், இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய மூன்று டெஸ்ட் போட்டிகளையும் மிஸ் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது

ஷ்ரேயாஸ் ஐயர்
ஷ்ரேயாஸ் ஐயர் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

இதன் காரணமாக அவர் எஞ்சியுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம் தான் என தகவல் வெளியாகியுள்ளது. ஷரேயாஸ் ஐயருக்கு முதுகில் விறைப்பு மற்றும் இடுப்பு பகுதியில் வலி இருப்பதாக கூறப்படுகிறது.

விசாகபட்டினத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் இந்திய அணி வீரர்கள் மூன்றாவது டெஸ்ட் நடைபெற இருக்கும் ராஜ்கேட்டுக்கு சென்றனர். ஆனால் ஷ்ரேயாஸ் மட்டும் மும்பைிலுள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கிருந்து பெங்களுருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று மூன்றாவது டெஸ்ட் தொடங்கும் முன் சில நாள்கள் அவர் ஓய்வில் இருப்பார் என தெரிகிறது.

சுமார் 30 பந்துகளுக்கு மேல் எதிர்கொண்ட பிறகு முதுகு பகுதியில் வலியால் அவதிப்பட்டதாக அணி நிர்வாகத்திடம் ஷ்ரேயாஸ் தெரிவித்த நிலையில், அவருக்கு போதிய ஓய்வும், புத்துணர்வும் வழங்க தீர்மானிக்கப்பட்டதாக தெரிகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முதுகு வலிக்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டார் ஷ்ரேயாஸ் ஐயர். அதன் பின்னர் முழு பிட்னஸ் பெற்று அணிக்கு திரும்பிய ஷ்ரேயாஸ், முதல் முறையாக முதுகு வலியால் அவதிப்பட்டு வருவதால், போதி ஓய்வு பெறுமாறு அறிவுறுத்தபட்டிருப்பதாக பிசிசிஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடைசியாக 13 இன்னிங்ஸில் ஒரு அரைசதம் கூட விளாசாமல் இருப்பதுடன், பேட்டிங்கில் மோசமான பார்மில் இருந்து வருகிறார். ஸ்பின் பவுலிங்கில் சிறப்பாக பேட் செய்பவராக இருந்து வரும் ஷ்ரேயாஸ் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் நான்கு முறை ஸ்பின் பந்து வீச்சில் தான் அவுட்டாகியுள்ளார்.

ஷ்ரேயாஸ் விலகிவிட்டால் ராஜத் பட்டிதார், ஷர்ப்ரஸ் கான் ஆகியோர் மட்டுமே பேட்ஸ்மேன்களாக உள்ளார்கள். இதற்கிடையில் எஞ்சிய டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படும் என தெரிகிறது. அதில் விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் இடம்பிடிக்கிறார்களா என்பது தெரியவரும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9  

WhatsApp channel

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score stay connected with HT Tamil