Shoaib Malik: சானியா மிர்சாவுடன் விவகாரத்து! நடிகையை திருமணம் செய்தார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் மாலிக்-shoaib malik marries sana javed amid rumours of separation with sania mirza - HT Tamil ,மட்டைப்பந்து செய்திகள்
தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Shoaib Malik: சானியா மிர்சாவுடன் விவகாரத்து! நடிகையை திருமணம் செய்தார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் மாலிக்

Shoaib Malik: சானியா மிர்சாவுடன் விவகாரத்து! நடிகையை திருமணம் செய்தார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் மாலிக்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 20, 2024 02:31 PM IST

பாகிஸ்தான் நடிகையை திருமணம் செய்திருக்கும் ஷோயிப் மாலிக் அவருடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து, "கடவுள் ஆசீர்வாதத்தால் ஜோடியாகியுள்ளோம். எல்லா புகழும் இறைவனுக்கே" என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித்துடன், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட்டர் சோயிப் மாலிக்
பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித்துடன், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட்டர் சோயிப் மாலிக்

இதையடுத்து இருவரும் மணகோலத்தில் இருக்கும் புகைப்படத்தை ஷோயிப் மாலிக் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "கடவுள் ஆசீர்வாதத்தால் ஜோடியாகியுள்ளோம். எல்லா புகழும் இறைவனுக்கே" என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஷோயிப் மாலிக்கும், நடிகை சனா ஜாவித்தும் டேட்டிங்கில் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகின. கடந்த ஆண்டில் அவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.

அதேபோல் படப்பிடிப்பு தளத்தில் தனது உதவியாளர்கள், மேக்கப் கலைஞர்களுடன் தகராறில் ஈடுபட்டு, மோசமான நடத்தையை வெளிப்படுத்தியதாக நடிகை சனா ஜாவித் மீது குற்றச்சாட்டு எழுந்தபோது, " நடிகை சனா ஜாவித்துடன் பல முறை பணியாற்றியிருப்பதால் அவரை பற்றி நன்கு எனக்கு தெரியும். எனது தனிப்பட்ட அனுபவத்தில் இருந்து சொல்வதென்றால் அவர் மிகவும் கணிவு மிக்கவர். என்னிடமும், அவரை சுற்றியுள்ளவர்களிடமும் மரியாதையாக நடந்துகொள்வார்" என ஆதரவு அளித்து எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார்.

இதற்கிடையே இந்திய அணியின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவை திருமணம் செய்திருந்த ஷோயிப் மாலிக், அவரை விவாகரத்து செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. கடந்த 2010இல் ஷோயிப் மாலிக் - சானியா மிர்சா திருமணம் பாரம்பரிய முஸ்லீம் முறைப்படி ஹைதராபாத்திலும், பின்னர் பாகிஸ்தானிலுள்ள சில்காட் நகரிலும் நடைபெற்றது. இவர்களுக்கு 2018இல் ஆண் குழந்தை பிறந்த நிலையில், மகனுக்கு இஸான் என பெயர் வைத்துள்ளனர்.

2021இல் இவர்களது திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், சத்தமில்லாமல் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களையும், இன்ஸ்டா ஸ்டோரிக்களையும் தொடர்ந்து பகிர்ந்து வந்துள்ளனர்.

அத்துடன் கடந்த ஆண்டில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் சோயிப் மாலிக் - சானியா மிர்சா ஆகியோர் ஜோடியாக பங்கேற்றனர். தி மிர்சா மாலிக் ஷோ என்ற பெயரில் அந்த நிகழ்ச்சி பல்வேறு பிரபலங்களும் பங்கேற்றனர்.

கடந்த புதன்கிழமை சானியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், மாலிக் உடனான விவாகரத்து பற்றி மறைமுகமாக வெளிப்படுத்துவதாக இருந்தது. அதில், திருமணம் கடினமானது. விவாகரத்து கடினமானது. கடினமானதை தேர்ந்தெடுங்கள்.

உடல் பருமன் கடினமான விஷயம். பிட்டாக இருப்பது கடினம். இதில் கடினமானதை தேர்ந்தெடுங்கள்.

கடனில் இருப்பது கடினம். நிதி ரீதியாக ஒழுக்கமாக இருப்பது கடினம். இதில் கடினமானதை தேர்ந்தெடுங்கள். தொடர்புடன் இருப்பது கடினம். தொடர்பில் இல்லாமல் இருப்பதும் கடினம். இதில் கடினமானதைத் தேர்ந்தெடுங்கள். வாழ்க்கை அவ்வளவு எளிதாக இருக்காது. அது எப்போதும் கடினமாக இருக்கும். ஆனால் நாம் கடினமானதை தேர்வு செய்யலாம். புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுங்கள்" என குறிப்பிட்டிருந்தார்.

அனைவருக்கும் தெரிந்த அளவில் இது சோயிப் மாலிக்குக்கு இரண்டாவது திருமணம் என்றாலும், அவர் ஏற்கனவே சானியாவுக்கு முன்பே ஆயிஷா சித்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலுக்கு ஷோயிப் மாலிக் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆனால் ஆயிஷாவும், அவரது குடும்பத்தினரும் இந்த விவகாரத்தை ஊடகத்தில் எடுத்து சென்றனர். இந்த விவகாரத்தில் ஆயிஷாவுடனான விஷயங்கள் அனைத்துமே மோசடியான நிகழ்வு என தெரிவித்தார்.

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.