தமிழ் செய்திகள்  /  Cricket  /  Shivam Dube, Rachin Ravindra, Ruturaj Gaikwad Batting Helps Csk To Score 206 Runs Against Gujarat Titans

CSK vs GT Live Score: வானவேடிக்கை காட்டிய சிக்ஸர் டூபே! முதல் பந்தில் சிக்ஸர் அடித்த வீரர் - குஜராத்துக்கு இமாலய இலக்கு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 26, 2024 09:27 PM IST

டாப் ஆர்டரில் பேட் செய்த ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் டூபே ஆகியோரின் அதிரடியால் சென்னை சூப்பர் கிங்ஸ் 206 ரன்கள் அடித்துள்ளார். 5 சிக்ஸர்கள் பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டினார் டூபே

பந்தை சிக்ஸருக்கு பறக்க விட்ட ஷிவம் டூபே
பந்தை சிக்ஸருக்கு பறக்க விட்ட ஷிவம் டூபே (AP)

ட்ரெண்டிங் செய்திகள்

சிஎஸ்கே அணியில் ஸ்பின்னர் மகேஷ் தீக்‌ஷனாவுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் பதிரனா சேர்க்கப்பட்டுள்ளார். பதிரனா இம்பேக்ட் வீரர்கள் பட்டியலில் தான் இடம்பிடித்துள்ளார்.  குஜாராத் டைட்டன்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

குஜராத் பவுலிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் ஸ்பின்னர் மகேஷ் தீக்‌ஷனாவுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் பதிரனா சேர்க்கப்பட்டுள்ளார். முதலில் பேட் செய்த சிஎஸ்கே 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்துள்ளது.

அதிகபட்சமாக ஷிவம் டூபே 51, ரச்சின் ரவீந்திரா 46, ருதுராஜ் கெய்க்வாட் 46 ரன்கள் எடுத்துள்ளனர். டேரில் மிட்செல் 24 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ரன் அவுட்டானார். 

குஜராத் பவுலிங்கில் ரஷித் கான் 2 விக்கெட்டுகளை எடுத்தார். ஸ்பென்சர் ஜான்சன், மோகித் ஷர்மா, சாய் கிஷோர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

ரச்சின் ரவீந்திரா அதிரடி

சிஎஸ்கே அணியின் ஓபனர் ரச்சின் ரவீந்திரா தொடக்கம் முதலே அதிரடியாக பேட் செய்தார். பவர்ப்ளேயில் குஜராத் டைட்டன்ஸ் பவுலர்கள் அனைவரின் ஓவர்களையும் வெளுத்து வாங்கினார். 20 பந்துகளில் 46 ரன்கள் அடித்த அவர் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளை அடித்தார்.

ரஷித்கான் வீசிய ஆட்டத்தின் 6வது ஓவரில் எதிர்பாராத விதமாக ஸ்டம்பிங் ஆனார் ரச்சின் ரவீந்திரா. அவரது ஆட்டம் சரவெடியாக இருந்தது.

ருதுராஜ் நிதானம்

ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பொறுமையாக பேட் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்தார். அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸர்களையும் அடித்த அவர் பார்ட்னர்ஷிப் அமைத்து வந்தார். 36 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஸ்பென்சர் ஜான்சன் பந்து வீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

டூபே வானவேடிக்கை

களமிறங்கிய முதல் இரண்டு பந்துகளிலும் அடுத்தடுத்து சிக்ஸர் அடித்து மிரட்டினார் சிஎஸ்கே பேட்டிங் ஆல்ரவுண்டரான ஷிவம் டூபே. இவர் ஒவ்வொரு சிக்ஸரை பறக்கவிடும் போதும்  மைாதனத்தில் ரசிகர்களின் ஆராவாரம் 120 டெசிபிளுக்கு மேல் இருந்தது. 

22 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்த நிலையில், இந்த சீசனில் சிஎஸ்கேவுக்காக முதல் அரைசதத்தையும் அடித்தார். 23 பந்துகளில் 51 ரன்கள் அடித்து ஷிவம் டூபே பந்தில் அடித்து ஆட முயற்சித்து அவுட்டானார். தனது இன்னிங்ஸில் 5 சிக்ஸர் 2 பவுண்டரிகளை அடித்து வானவேடிக்கை நிகழ்த்தினார். 

முதல் பந்தில் சிக்ஸர்

டூபே அவுட்டான பிறகு சிஎஸ்கே அணியில் புதிய வீரரான சமீர் ரிஸ்வி முதல் போட்டியில் பேட் செய்ய வந்தார். ஐபிஎல் போட்டியில் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்ஸரை பறக்கவிட்டார். ரஷித் கான் வீசிய அந்த ஓவரில் ரிஸ்வி 2 சிக்ஸர்கள் அடித்தார். சிறிய கேமியோ ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 6 பந்துகளில் 14 ரன்கள் அடித்து அவுட்டானார். 

ஸ்லோ ஓவர் ரேட்

குறிப்பிட்ட நேரத்தில் 20 ஓவர்களை குஜராத் டைட்டன்ஸ் அணி வீசாத நிலையில், கடைசி ஓவரில் நான்கு பீல்டர்கள் மட்டுமே பவுண்டரி அருகே நின்றனர். இந்த நெருக்கடியுடன் பந்து வீசிய மோகித் ஷர்மா கடைசி ஓவரில் 8 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டையும் கைப்பற்றினார். 

#tamilhindustantimes #hindustantimestamil #HTTamil #TamilHindustanTimes

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point