GT vs PBKS Result: கேட்சை விட்டு மேட்சை கோட்டைவிட்ட குஜராத்! இளம் பேட்ஸ்மேன் ஷஷாங்க் சிங் அதிரடியால் பஞ்சாப் வெற்றி
முக்கிய பேட்ஸ்மேன்கள் அவுட்டான பின்னர் நெருக்கடியான சமயத்தில் பேட் செய்ய வந்த ஷஷாங்க் சிங், கடைசி வரை போராடி பஞ்சாப் அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.

பந்தை லெக் சைடு பவுண்டரிக்கு அடிக்கும் ஷஷாங்க் சிங் (AFP)
ஐபிஎல் 2024 தொடரின் 17வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டி தொடங்குவதற்கு முன் குஜராத் அணி 3 போட்டிகளில் 2 வெற்றியுடன் 6வது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் அணி 3 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் 7வது இடத்தில் உள்ளது.
குஜராத் அணியில் டேவிட் மில்லருக்கு பதிலாக கேன் வில்லியம்சன் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சீசனில் அவர் களமிறங்கும் முதல் போட்டியாக இது அமைந்துள்ளது. அதேபோல் பஞ்சாப் கிங்ஸ் அணியில் லியாம் லிவிங்ஸ்டனுக்கு பதிலாக சிகந்தர் ராசா சேர்க்கப்பட்டுள்ளார்.
