Shardul Takur: கொஞ்ச நஞ்சமா கொடுமை படுத்துனாங்க..! பொய் சொல்றாரு டிம் பெய்ன்! ஆஸ்திரேலியா டூரில் நிகழ்ந்த சம்பவம்
கோவிட்-19 தொற்று காலகட்டத்தில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணியினர் மோசமாக நடத்தப்பட்டது குறித்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் வெளிப்படுத்தியுள்ளார். ஆஸ்திரேலியா டூரில் நிகழ்ந்த சம்பவம் பற்றி அப்போது கேப்டனாக இருந்த டிம் பெய்ன் பொய் செல்றாரு எனவும் அவர் கூறியுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் ஒரு பகுதியாக, ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் இந்த டெஸ்ட் தொடர் இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
கடந்த முறை ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் இந்திய அணியினருக்கும், ரசிகர்களுக்கும் மறக்க முடியாததாக அமைந்தது. 2021இல் சுற்றுப்பயணம் செய்த இந்தியா பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தபோதிலும், தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று வரலாற்று சாதனை புரிந்தது. ஆஸ்திரேலியாவின் 'கோட்டை' என்று புகழ்பெற்ற மைதானமான பிரிஸ்பேனில் உள்ள கபாவில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியும் பெற்றது.
கடந்த இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும் இறுதி வரை தகுதி பெற்று கோப்பையை தவறவிட்ட இந்தியா, தற்போது மூன்றாவது முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதையடுத்து முந்தைய ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு அளித்த வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர், அணியினர் சந்தித்த சிரமங்கள், கோவிட்-19 பெருந்தொற்று காலமான அப்போது ஆஸ்திரேலியாவில் வைத்து இந்திய அணியினர் நடத்தப்பட்ட விதம் குறித்து அவர் வெளிப்படுத்தியுள்ளார். ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் முழுவதும் இந்திய அணி களத்துக்கு வெளியே சந்தித்த பிரச்னைகள் பற்றி விரிவாகப் பேசியுள்ளார்.
பல்வேறு பிரச்னைகள்
அப்போதைய இந்திய கேப்டன் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் டெஸ்டுக்குப் பிறகு அணியை விட்டு வெளியேறியபோது, முகமது ஷமி, கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற சில முக்கிய வீரர்கள் தொடர் முழுவதும் காயங்களை எதிர்கொண்டனர்.
இது ஒரு புறம் என்றால், குயின்ஸ்லாந்து அரசாங்கம், 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு (கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக) இந்தியக் குழுவிடம் அப்பட்டமான முறையில் நடந்து கொண்டது.
அவர்கள் எங்களை நடத்திய விதம் மிகவும் கொடூரமானது. நான்கைந்து நாள்களுக்கு ஹோட்டலில் ஹவுஸ் கீப்பிங் சேவை இல்லை. நீங்கள் பெட்ஷீட்களை மாற்ற விரும்பினால், சோர்வாக இருந்தாலும் ஐந்து மாடிகள் வரை நடக்க வேண்டும்.
அப்போதைய ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெய்ன் ஒரு நேர்காணலில் உரையாற்றியபோது, இந்திய அணிக்கு அவர்கள் விரும்பியதை வழங்கியதாக அவர் கூறினார். இது முற்றிலும் பொய் என்றார்.
டிம் பெய்னிடம் இருந்து சில நேர்காணல்களை நான் கேள்விப்பட்டேன். அவர் முற்றிலும் பொய் சொல்றாரு. அவர் ஊடகங்களில் சில விஷயங்களை உருவாக்கி தன்னைக் காப்பாற்றிக் கொண்டார். மேலும் 'இந்திய அணிக்கு நாங்கள் எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை, அவர்கள் விரும்பியதைக் கொடுத்தோம்' என்று மூடிமறைத்தார். ஆனால் எனக்கு உண்மை தெரியும்." தாக்கூர் கூறினார்.
"விராட் கோலி வெளியேறிய பின்னர் அஜிங்க்யா ரஹானே மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுடன் நாங்கள் விரும்புவதைத் தருவதற்காக தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்" என்று கூறினார்.
காயத்தால் விலகிய ஷர்துல் தாக்கூர்
ஷர்துல் இந்தியாவின் முந்தைய இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் ஒரு பகுதியாக இல்லை, ஆனால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்த கடைசி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் முதல் டெஸ்டில் விளையாடினார்.
இந்தியாவின் தற்போதைய வேகப்பந்து வீச்சுத் தாக்குதலில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் உள்ளனர், கடந்த ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பையின் போது ஏற்பட்ட காயத்தில் இருந்து அவர் தொடர்ந்து மீண்டு வருவதால், இந்த ஆண்டின் இறுதியில் முகமது ஷமி வரக்கூடும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்